ரஜினியின் புதிய வில்லன்!

Webdunia
வியாழன், 8 மே 2008 (13:11 IST)
சிவாஜி தொடங்கும் போது கடைசி வரை பிரச்சனையாக இருந்தது வில்லன் கதாபாத்திரம். சத்யராஜில் தொடங்கி மோகன்லால் வரை யார் யாரையோ முயன்று, இறுதியில் சுமனில் வந்து முடிந்தது.

ரோபோவிற்கு வில்லன் முதலிலேயே கிடைத்துவிட்டார். ராம்கோபால் வர்மாவின் முதல் படம் சிவாவில் (தமிழில் உதயம்) நாகார்ஜுனாவுடன் மோதுவாரே தாடி வைத்த ஒரு வில்லன்...? ஞாபகமில்லாதவர்கள் வர்மாவின் சத்யா பட ஹீரோவை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த ஹீரோ சக்ரவர்த்தியே ரோபோவில் வில்லனாம்.

தெலுங்கில் நாயகனாக நடித்துவந்த சக்ரவர்த்தி ஒரு உதவி இயக்குனரும் கூட. வர்மாவிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிந்தவர், 'தர்வாஸா பந்த் ஹே' என்ப படத்தையும் இயக்கியுள்ளார்.

சமுத்திரக்கனி, ரமணா வரிசையில் சக்ரவர்த்தியும் இயக்குனராக இருந்து வில்லனாகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments