கிளாமர் இல்லாத த்ரிஷா!

Webdunia
சனி, 3 மே 2008 (12:49 IST)
" மொழி"க்குப் பிறகு ராதாமோகன் இயக்கிக் கொண்டிருக்கும் 'அபியும் நானும்' படத்துக்கு த்ரிஷாதான் நாயகி.

ஒரு பெண் குழந்தை பிறந்து, வளர்ந்து, கல்யாணம் ஆகிற வரையில் ஒரு தந்தைக்கு ஏற்படுகிற அனுபவங்கள்தான் கதை. பிரகாஷ் ராஜ் அழுத்தம் திருத்தமான, அதே சமயம் அன்பான அப்பா ரோலில் நடிக்கிறார். த்ரிஷா ஜோடியாக புதுமுகம் கணேஷ் அறிமுகமாகிறார்.

பள்ளி மாணவி, பின் கல்லூரி மாணவி என த்ரிஷா நடிப்பில் வெளுத்துக் கட்டியிருக்கிறார். வசனகர்த்தா விஜி இல்லாத குறையை தன்னுடைய உதவியாளர்கள் நாராயணன், சுப்பிரமணியன் மூலம் நிறைவு செய்துள்ளார் ராதாமோகன்.

பிருத்விராஜிக்கு கெளரவ வேடம். ப்ரீத்தாவின் ஒளிப்பதிவில் வரவிருக்கும் 'அபியும் நானும்' படத்துக்குப் பின்னர் மொழியின் இந்தி ரீ-மேக்கில் ஈடுபடவுள்ளார். அதன்பின்னர் ஒரு முழு நீள ஆக்சன் படம் பண்ணும் எண்ணத்தில் இருக்கிறார் ராதாமோகன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments