Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருவியும் கோடை விடுமுறையும்!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (15:27 IST)
webdunia photoWD
மே 3 ஆம் தேதி 'குருவி' பறக்கவிருக்கிறது. பிரசாத்தில் 400 பிரிண்டுகள் ரெடியாக காத்திருக்கிறது.

தமிழக, கேரள, கர்நாடக திரையரங்குகளில் ரிலீசாக காத்திருக்கும் குருவியின் கேரள உரிமை மட்டும் 1.5 கோடி விற்பனையாகியுள்ளது. 48 திரையரங்குகளில் ரிலீசாகிறது.

ஒகேனக்கல் பிரச்சனைக்குப் பின்பு தமிழ்ப் படங்கள் சரிவர ஓடமுடியாத நிலையில், பெங்களூருவில் 6 தியேட்டர்க‌ளி‌ல் குருவி திரையிடப்பபடுகிறது.

உதயநிதி ஸ்டாலினின் முதல் தயாரிப்பில் U/ A சர்ட்டிஃபிகேட்டுடன் ஏக எதிர்பார்ப்பில் உள்ள குருவியை மே 1 ரிலீஸ் செய்யப்படுவதாக இருந்தது. 2 ஆம் தேதி பந்த் என்பதால் 3 ஆம் தேதியாக மாற்றியுள்ளது தயாரிப்பு மற்றும் விஜய் தரப்பு.

ஓரிரு நாட்கள் தள்ளிப்போனாலும் 'குருவி' ரிலீசை அமர்க்களப்படுத்த தோரணம், கொடிகள், போஸ்டர்கள் இத்தியாதிகளோடு தயாராகிவிட்டார்கள் விஜய் ரசிகர்கள்.

தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் விஜய்க்கு பாப்புலாரிட்டி அதிகம் என்பதால் கோடை விடுமுறையில் வெளிவரும் குருவிக்கு இரட்டை வரவேற்பிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

Show comments