Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் மேனாக சூர்யா!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (19:28 IST)
கமலுக்கு அடுத்தபடியாக வித்தியாசமான கேரக்டர்களை செய்வதில் சூர்யாவுக்கு நிச்சயமாக ஒரு இடமுண்டு. அந்த வகையில் சூர்யா சூப்பர் மேனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டுள்ளது.

அஞ்சாதே வெற்றிக்குப் பின் மிஷ்கின் இயக்கி நடிக்கவிருக்கும் படம் 'நந்தலாலா'. நந்தலாலாவுக்குப் பிறகு சூப்பர்மேன் கதையில் கவனம் செலுத்தவுள்ளார் மிஷ்கின்.

" சூப்பர்மேன் கதையை முதன் முதலாக தமிழில் படமாக்க திட்டமிட்டுள்ளேன். அஞ்சாதே வெற்றி கொடுத்த மகிழ்ச்சி என்னை அடுத்தடுத்த படங்களை செய்ய வைத்துள்ளது. நந்தலாலாவுக்குப் பின் நான் இயக்கப் போகும் சூப்பர்மேன் கதைக்கு ஏற்றவராக என் எண்ணத் திரையில் தோன்றியவர் சூர்யாதான்.

அதுபற்றி அவரோடு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. காலமும், களமும் அமைந்தால் தமிழ் ரசிகர்களுக்கு அந்தப் படம் நிச்சயம் ஒரு விருந்தாய் அமையும்" என்றார் மிஷ்கின்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 மொழிகளில் நாளை வெளியாகிறது சன்னிலியோன் திரைப்படம்.. கோட் வசூலுக்கு பாதிப்பா?

ரூ.2.5 கோடி மட்டுமே வசூல்.. பயங்கர நஷ்டம்.. தெலுங்கு ‘கோட்’ விநியோகிஸ்தர்கள் புலம்பல்..!

மாளவிகா மோகனனின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

நடிகை திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

சீனு ராமசாமி பதட்டப்பட்டு நான் பார்த்ததேயில்லை- விஜய் சேதுபதி பாராட்டு!

Show comments