கோடிகளை கொட்டிக் கொடுத்த குசேலன்!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (19:19 IST)
கூடாரத்துக்குள் கொஞ்சம் இடம்கேட்ட ஒட்டகத்தின் கதையைப் போல, குசேலன் ஏறக்குறைய ரஜினி படமாகவே ஆகிவிட்டது.

ஒரு சில காட்சிக‌ளில் மட்டுமே ரஜினி தலைகாட்டுவார் என்ற ஆரம்பகாலச் செய்திகளில் தங்களது கையையும், பையையும் பிசைந்து கொண்டிருந்தது தயாரிப்பு வட்டாரம்.

இப்போதோ, குசேலனின் தமிழ், தெலுங்கு உரிமையை சாய்மீரா நிறுவனத்திடம் 65 கோடிக்கு விற்று குளிர்ந்து போயிருக்கிறது. தயாரிப்புச் செலவு 40 கோடி தாண்டாத நிலையில், குசேலனால் கவிதாலயாவிற்கும், செவன் ஆர்ட்ஸிற்கும் தலா 15 கோடி லாபமாம்.

தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப ரஜினிக்கு படத்தில் அதிக பங்களிப்பு, நயன்தாராவுடன் டூயட் சமாச்சாரங்கள் என கெஸ்ட் ரோலில் வரவிருந்த ரஜினியை படம் நெடுகிலும் வருமளவிற்கு கதையில் மாற்றங்கள் கொண்டுவந்த பி. வாசுவிற்கு இப்போது பட்டுக் கம்பளம் விரித்து மரியாதை நடக்குதாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments