மீனவர்களின் வாழ்க்கையில் விளையாடும் தாதாக்கள்!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (19:09 IST)
' நெஞ்சைத்தொடு' படத்தின் ஹீரோ ஜெமினி. தற்போது ராதாமோகன். சீமான் ஆகியோருடன் இணை இயக்குனராக இருந்த சகா என்ற சுப்ரமணி இயக்கும் 'ஆழி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவுக்காக கராத்தே, சிலம்பம், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற கலைகளை கற்றறிந்த இவர், கலா மாஸ்டரிடம் நடனம் பயின்றுள்ளார். 'நெஞ்சைத்தொடு' படத்தில் மீசை இல்லாமல் அமுல் பேபியாக இருந்த இவர் தற்போது முரட்டுத்தனமான மீசையுடன் புதிய கெட்டப்பில் இருக்கிறார்.

' ஆழி' படத்தில் முரட்டுத்தனமான இளைஞர் வேடமேற்கிறார். 'ஆழி' என்றால் கடல். மீனவச் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. அங்கேயுள்ள மீனவர்களிடம் மாமுல் கேட்டு தொல்லை தரும் ரவுடிகளுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்கிறார்கள்.

அத்தோடு சமீபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி சென்னை அயனாவரத்தில் என்கெளண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். 'ஆழி' கதையிலும் அந்த ரவுடியின் வாழ்க்கையை ஆங்காங்கே மறைமுகமாக சொல்லப் போகிறாராம் இயக்குனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரஜினி படத்தில் இணையும் விஜய் சேதுபதி.. அவரே உறுதி செய்த தகவல்..!

உணர்ச்சிவசப்பட்டு அழுத திவ்யா கணேஷ்.. வைரலாகும் Stay Strong Divya ஹேஷ்டேக்..!

லோகேஷ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!. வீடியோவே வேறலெவல்!...

ஒன் மேன் ஷோ! ‘வா வாத்தியாரே’ படம் எப்படி இருக்கு? வெளியான ட்விட்டர் விமர்சனம்

பராசக்தியை பாராட்டிய ரஜினி ஜனநாயகன் பத்தி பேசினாரா?!.. பொங்கும் விஜய் ரசிகர்கள்..

Show comments