ஒரு பாட்டுக்காக ரேட்டை உயர்த்தும் தயாரிப்பாளர்!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (20:16 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட படம் 'காதலில் விழுந்தேன்'. வி. சேகரிடம் உதவியாளராக இருந்த பிரகாஷ்தான் இயக்குனர். ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தில் ஐவரில் ஒருவராக நடித்த, நடிகை தேவயாணியின் தம்பி நகுல் இந்தப் படத்தின் ஹீரோ.

ஓரளவுக்கு பெரிய பட்ஜெட் படம்தான் என்றாலும், இரண்டு ஆண்டுகள் வரை எடுக்க வேண்டிய படமில்லை. எல்லாம் முடிந்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டு பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அப்படி வெளியான பாடல்களில் 'நாக்குமுக்கு' பாடல் செம ஹிட். எல்லா டி.வி. நடன நிகழ்ச்சிகள் மேடை கச்சேரிகளில் பாடும் பாட்டாக அமைந்துவிட்டதால் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை பாராட்டியதோடு பரிசும் கொடுத்திருக்கிறார்.

இந்த ஒரு பாடலின் ஹிட்டை மனதில் வைத்துக் கொண்டு ஏரியா ரேட்டை உயர்த்திவிட்டார் தயாரிப்பாளர். செங்கல்பட்டு ஏரியா மட்டும் ரூபாய் 45 லட்சம் கேட்டும் கொடுக்கப்படவில்லை.

இதற்கிடையில், அந்த ஒரு பாடலை மட்டும் மறுபடியும் ரீ ஷூட் செய்து இன்றும் ரேட்டை உயர்த்த திட்டமிருக்கிறார் தயாரிப்பாளர். 'ஆடி கறக்கிற மாட்டை ஆடி கறக்கணும், பாடி கறக்கிற மாட்டை பாடி கறக்கணும்' எனும் பழமொழி இதுதான் போலும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஏகே 64’க்கு அனிருத் இல்லையா? புது ட்விஸ்ட்டை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

Show comments