அனுசரிக்கும் தமன்னா!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (14:13 IST)
webdunia photoFILE
' கல்லூரி' படத்தின் நாயகி தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய இப்படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை கொடுத்தது. என்றாலும், இதன் நாயகிக்கு ஏகப்பட்ட படங்கள் குவியத் தொடங்கிவிட்டன.

அழகு மட்டும் இல்லாமல் நன்றாக நடிக்கவும் செய்வார். அதுமட்டும் இல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதுவேண்டும், இதுவேண்டும் என்று பந்தா பண்ணமாட்டார்.

எல்லோரிடமும் அனுசரித்து நடந்து கொள்ளும் நடிகையும் கூட, எனவே அவரின் அழகும், நடிப்பின் திறமையும் ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்தின் கண்களை உறுத்த, சூர்யாவை வைத்து தான் இயக்கும் 'அயன்' படத்தின் நாயகியாக்கிவிட்டார்.

அதேபோல், தற்போது 'ஆனந்த தாண்டவம்' இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கும் படம். இதையடுத்து 'படிக்காதவன்' தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இப்படி தொடர்ந்து படங்கள் கிடைக்க, நீங்களும் ஷூட்டிங் ஸ்பாட்டில் குளிக்க 'பிஸ்லரி வாட்டர்' தான் வேண்டுமென்றெல்லாம் அடம்பிடிக்கக்கூடாது. என்ன தமன்னா சரியா!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments