Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இந்தியன் தியேட்டர்ஸ்!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (19:59 IST)
ஐந்து ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட பட நிறுவனம் இந்தியன் தியேட்டர்ஸ். இதன் உரிமையாளர் கிருஷ்ணகாந்த். லஷ்மி மூவி மேக்கர்ஸில் மேனேஜராக இருந்த லஷ்மிகாந்த் படிப்படியாக வளர்ந்து இந்தியன் தியேட்டர்ஸ் எனும் பட நிறுவனத்தை ஆரம்பித்து, தன் பெயரை கிருஷ்ணகாந்த் என மாற்றிக் கொண்டவர்.

தனுஷ் நடித்த 'திருடா திருடி', சிம்பு நடித்த 'மன்மதன்'. நடிகர் திலகத்தின் பேரன் துஷ்யந்தை வைத்து 'மச்சி' ஆகிய படங்களை தயாரித்தார். 'திருடா திருடி' கோடி கோடியாக குவித்தாலும், 'மன்மதன்' தயாரிப்பின் செலவு அதிகமானதால் நூறு நாட்களைத் தாண்டி ஓடியும் நஷ்டத்தையே சந்தித்தார். இதனிடையே மூன்று ஆண்டுகளுக்கு முன் இவரின் தயாரிப்பில் தொடங்கப்பட்ட 'சொல்லி அடிபேன்' படம் முடிவடைந்த நிலையில் இருந்தும் படம் வெளியாகாமல் இருந்து வருகிறது.

தற்போது மீண்டும் ஒரு படம் தயாரிக்கும் பணியில் இருக்கிறார். நல்ல தயாரிப்பாளர் நஷ்டத்தில் இருப்பதால் சில பைனான்ஸியர்கள் 'சொல்லி அடிப்பேன்' படத்தை ரிலீஸ் செய்யவும், இன்னொரு படத்தை தயாரிக்கவும் பண உதவி செய்ய முன்வந்துள்ளனர். இதன்படி நிறைய கதைகள் கேட்ட கிருஷ்காந்த் மணிமாறன் என்பவர் சொன்ன கதை பிடித்துப் போக, ராய் என்ற எம்.பி.ஏ. பட்டதாரி ஹீரோவாக நடிக்க, 'சொல்லி அடிப்பேன்' பட ரிலீ ஸ ¤ம், அடுத்த பட பூஜையும் ஒரே நாளில் நடக்கவிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'புஷ்பா 2’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நீளமா? ‘இந்தியன் 2’ பார்த்தும் திருந்தலையா?

எலான் மஸ்க் என் ட்விட்டரை முடக்கினால் எனக்கு வெற்றி: சிவகார்த்திகேயன்..!

47 வயதில் திருமணம் செய்து கொண்ட ‘பாகுபலி’ நடிகர்.. மணமகள் டாக்டரா?

மீண்டும் இணையும் ராம் - ஜானு.. விரைவில் உருவாகிறது ‘96’ இரண்டாம் பாகம்..!

லஞ்சம் வாங்கியவரை கைது செய்யாமல் மாநகராட்சி பணியில் அமர்த்துவதா? அன்புமணி ராமதாஸ்..!

Show comments