Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலுவுக்கு முதல் மரியாதை!

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (15:14 IST)
' ஆயுதபூஜை', 'ரெட்டை ஜடை வயசு' ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் சிவக்குமார். இவரிடம் உதவி இயக்குனராக தொழில் பயின்று 'நெஞ்சைத் தொடு' என்ற படத்தை ஹீரோ ஜெமினி, ஹீரோயின் லட்சுமிராய் மற்றும் நாகேஷ், நாசல், காமெடிக்கு கணேஷ் என்று பலரை வைத்து இயக்கியவர் ராஜ்கண்ணன்.

' நெஞ்சைத் தொடு' படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் சோர்வில் இருந்த இயக்குனருக்கு மீண்டும் ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

முந்தைய படத்தில் காதல், ஆக்சன், சென்டிமெண்ட் என்று இருந்தாலும் காமெடி சீன்கள் பெரியதாக பேசப்படவில்லை. எனவே தற்போது புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்திற்கு முதலில் புக் செய்யப்பட்டிருப்பவர் வடிவேலு.

' வைகைப் புயல்' படத்தில் இருந்தால் யாரை வைத்து இயக்கினாலும் படம் ஐம்பது நாட்களாவது ஓடும் என்பதால் இதை செய்திருக்கிறார்.

நெஞ்சைத் தொடு படத்தில் பணியாற்றிய டெக்னீஷயன்களில் ஸ்ரீகாந்த் தேவா மட்டுமே இந்த படத்திலும் இசையமைக்கிறார். மற்றபடி அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் முந்தைய படத்தில் வேலை செய்யாதவர்கள். இந்தப் படமாவது அவரின் நெஞ்சை மட்டுமல்ல ரசிகர்களின் நெஞ்சையும் தொடட்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments