இரண்டு நாயகியா? வேண்டவே வேண்டாம்!

Webdunia
திங்கள், 21 ஏப்ரல் 2008 (16:15 IST)
' இரண்டு நாயகிகளில் ஒருத்தர் நீங்கள்' என்று த்ரிஷாவிடம் கதை சொல்லப் போனால் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

webdunia photoWD
இந்த இரண்டில் ஒன்று என்ற கதையே வேண்டாம் என்பதில் தீர்மானமாக இருக்கிறார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் சம்மதிப்பதில்லை. காரணம் 'நம்பர் ஒன்' நாயகியாக வேண்டும் என்பதுதான்.

இரண்டில் ஒரு நாயகியாக இருந்தால் தனக்கு நடிக்கும் காட்சிகள் குறைவாக கிடைக்கும் என்பதோட ு, கூட நடிக்கும் மற்றொரு நாயகி பெயரைத் தட்டிக்கொண்டு போகவும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்பவர், உதாரணத்திற்கு சந்திரமுகியில் ஜோதிகா, நயன்தாரா இருவர் இருந்தாலும் ஸ்கோர் செய்திருப்பவர் ஜோதிகா.

அதேபோல் 'தூள்' படத்தில் ஜோதிகா - ரீமாசென் இருவரில் ரீமா சென் பெயரைத் தட்டிச் சென்றிருப்பார். ஆக, இதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் தான் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வேண்டும், அத்தனை பாராட்டும் தனக்கே கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறேன் என்கிறார் த்ரிஷா.

எனவே இரண்டு நாயகிகள் ஸ்கிரிப்ட் எடுத்துக் கொண்டு த்ரிஷா வீடுள்ள தெருவில் கூட நடந்துவிடாதீர்கள் இயக்குனர்களே...

'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது? படக்குழு அறிவிப்பு..!

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பாட்டு பாடிய நாட்டுப்புற பாடகி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

Show comments