சமுத்திரக்கனியின் நாடகம்!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (16:53 IST)
நடிகர்களாக திரையில் அறிமுகமானவர்களைவிட, இயக்குனராக அறிமுகமானவர்களே நடிப்பில் சிரத்தை காட்டுகிறார்கள் என்று முணுமுணுப்பு. உண்மையா என்று பார்த்தால், நூறு சதம் சரி.

யோகிக்காக உடல் இளைத்து, தலைமயிரின் கலர் தொலைத்து நிற்கிறார் அமீர். எஸ்.ஜே. சூர்யா ஒட்டவெட்டிய முடியும் சிங்கப் பார்வையுமாக சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார். இவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடுகிறவர் சமுத்திரக்கனி.

சுப்ரமணியபுரம் படத்தில் எண்பதுகளின் ஸ்டெப் கட்டிங்குடன் லாம்பி ஸ்கூட்டரில் வலம் வருகிறவர் அடுத்து நாடகம் என்றொரு படத்தை இயக்குகிறார். நடிப்பும் இவரே. படத்தில் இவருக்கு இரண்டு வேடங்கள்.

ஒரு வேடத்துக்காக ஏழு கிலோ குறைந்து 75 கிலோவாகியிருக்கிறார். இன்னொரு கேரக்டர் கொஞ்சம் குண்டு. அதிகமில்லை 150 கிலோதான்!

இந்த வேடத்திற்காக குறைந்த எடையை கூட்டப் போகிறாராம்.

பார்த்து... கனி வெடித்திடப் போகுது!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

சூர்யாவுக்கு ஜோடி ஸ்ரீலீலா கிடையாது.. ‘புறநானூறு’ நடந்திருந்தா ஹீரோயின் யார் தெரியுமா?

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே நெட்பிளிக்ஸ் வாங்கிய தனுஷ் படம்.. எத்தனை கோடி?

Show comments