திருப்பதியில் 'சாமி'யாடிய ஸ்ரேயா!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2008 (16:35 IST)
இடுப்பைக் கிள்ளிய ரசிகரின் கன்னத்தை பழுக்க வைத்தார் நடிகை ஸ்ரேயா. இந்த ஆக்சன் சம்பவம் நடந்தது திருப்பதியில்!

உகாதியை முன்னிட்டு திருப்பதி கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்றார் ஸ்ரேயா. தரிசனத்தை முடித்தவர் அதிகாலை 3.45 மணிக்கு வெளியே வந்தார்.

ஸ்ரேயாவின் தெய்வீக களையில் லயித்துப் போன ரசிகர் ஒருவர் அவர் பின்னாலேயே வந்துள்ளார். கூட்ட நெரிசலில் அவர் ஸ்ரேயாவுக்கு கை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. என்ன நடந்ததோ... திடீரென்று அந்த ரசிகரின் கன்னத்தில் அறை‌ந்தா‌ர் ‌ஸ்ரேயா. அடுத்த கணம் அவர் காரில் ஏறி சென்றுவிட, ஸ்ரேயாவின் பாதுகாப்புக்கு வந்த உள்ளூர் எம்.எல்.ஏ. வெங்கட்ரமணாவின் அடிபொடிகள் அந்த வாலிபரை துவைத்து எடுத்தனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவன் என் இடுப்பைக் கிள்ளி சில்மிஷம் செய்தான். புனிதமான இடத்தில் மோசமாக நடந்துகொண்டதால் அவனை அறைந்தேன் என்று பளாருக்கு விளக்கமளித்துள்ளார் ஸ்ரேயா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபுதாபியில் திடீரென அஜித்தை சந்தித்த அனிருத். வைரலாகும் புகைப்படங்கள்!

சென்சார் சர்டிபிகேட் வருவது போல் தெரியவில்லை.. நேரடியாக ஓடிடி ரிலீஸ்? அமேசானா? நெட்பிளிக்ஸா?

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

Show comments