முதல்வருடன் ராதிகா சந்திப்பு!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (19:20 IST)
தென்னிந்திய டி.வி. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராதிகா, சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.

தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றும் லைட்மேன்களுக்கு சம்பள உயர்வு குறித்து பெப்சி மற்றும் சின்னத்திரை சங்கங்களுடன் டி.வி. தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சினி டெக்னிஷியன் யூனியனைச் சேர்ந்த சிலர், ராடான் தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர் மற்றும் பிரமிட் சாய்மீராவின் சிம்ரன் திரை படப்பிடிப்புத் தளங்களில் அத்துமீறி நுழைந்தனர். கேமரா ஒயர்களை பிடுங்கி எரிந்ததுடன் கேமரா உதவியாளரையும் தாக்கினர். இதுகுறித்து சங்க நிர்வாகிகளுடன் சென்று கமிஷனரிடம் புகார் தெரிவித்தார் ராதிகா. பிறகு தமிழக முதல்வரை சந்தித்து புகார் கொடுத்தார்.

புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த முதல்வர், இன்று ஒரு நாள் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று மட்டும் தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

நாளை வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை: போலீசார் அறிவிப்பு..!

Show comments