சத்யராஜை பாராட்டிய பாரதிராஜா!

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (18:53 IST)
நடிகர் சத்யராஜை டா போட்டு பேசியிருக்கிறார் பாரதிராஜா. சரியாகச் சொன்னால் பேசவில்லை, பாராட்டியிருக்கிறார்!

உண்ணாவிரத மேடையில் உணர்ச்சிவசப்பட்டு சத்யராஜ் கொட்டிய அனல் வார்த்தைகளுக்கு அகிலமெங்கும் உ‌ள்ள தமிழர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உணர்ச்சி பிரவாகமாக பெருக்கெடுத்துவிட்டு, சத்யராஜ் இருக்கைக்கு திரும்பியதும் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. உணர்ச்சியிலிருந்து முழுமையாக விடுபடாத சத்யராஜிடம் தொலைபேசியில் பேசியது பாரதிராஜா.

பெரியார் மாதிரியே இருந்ததுடா உன்னோட கோபம் என்று உரிமையுடன் டா போட்டு சத்யராஜை பாராட்டியிருக்கிறார். மேடையை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்த சத்யராஜின் பேச்சுக்கு உள்ளூர் தமிழர்களை விட வெளிநாடு வாழ் தமிழர்களிடம் அமோக ஆதரவாம். தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சத்யராஜை பாராட்டி வருகிறார்களாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments