குசேலன் - கூட்டமாக வரும் சிங்கம்!

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2008 (13:50 IST)
சிங்கம் இந்த முறை சிங்கிளாக வரவில்லை. பெரும் கூட்டத்துடன் வருகிறது. குறைந்தகால தயாரிப்பு என்று சொல்லித்தான் 'குசேலன்' படத்தை ஆரம்பித்தார்கள். ரஜினி பெயரை அறிவித்ததுமே, கலைடாஸ்கோப் போல அப்படியொரு மாற்றம்.

ரஜினி, பசுபதி, நயன்தாரா, மீனா, வடிவேலு... என்று இரண்டு டஜன் நடிகர்கள் குசேலனில் தற்போது நடித்து வருகிறார்கள். அதுமட்டுமல்ல, ரஜினியின் ரசிகர்கள் நிறைந்த இன்னொரு தேசம் ஜப்பான். அங்குள்ள ரசிர்களை கவர, ஓரிரு காட்சிக‌ளில் ரஜினி ஜப்பான் நாட்டு நடிகர்களுடன் தோன்றுகிறாராம்.

கதையை நன்றாக எழுதுகிறாரோ இல்லையோ, கமர்ஷியலை சரியான விகிதத்தில் கலப்பதில் பி. வாசு ஒரு பி.ஹெச்டி. அவரது ஐடியாதானாம் இந்த ஜப்பான் நடிகர்கள்.

ஆக, இந்தமுறை சிங்கம் சிங்கிளாக வரவில்லை. ஜப்பான் சிறுத்தைகளுடன் சேர்ந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

Show comments