சந்தியா ராகம்!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (16:43 IST)
சந்தியாவுக்கு சரீரம்தான் கட்டுக்குள் இல்லையே தவிர, சாரீரம் கணீர்! இவர் குரலை கேட்ட இயக்குனர் ராஜா ஆறுமுகம் மஞ்சள் வெயில் ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார். இது பழைய செய்தி. புதிய செய்தி, தனக்குப் பிடித்த பாடகி வேடத்தில் நடிக்கிறார் சந்தியா.

பி.வி. ரவியின் மகேஷ் சரண்யா மற்றூம் பலர் படத்தில் சந்தியாவுக்கு கல்லூரி மாணவி வேடம். பார்ட் டைம் மேடையில் பாடுவது இவரது பொழுதுபோக்கு.

பாடகி என்று வந்துவிட்டால் பாடாமல் இருக்க முடியுமா? தமிழ் சினிமாவில் பாடல்களின் எண்ணிக்கை ஆடிக்கழிவு துணியாக சுருங்கிக் கொண்டிருக்கையில் மகேஷ் சரண்யா மற்றும் பலரில் எட்டுப் பாடல்கள். இதில் யுகபாரதியின் இலக்கிய சுத்தமான பாடலும் அடக்கம்.

ரவியின் இந்தப் படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை. பதிலாக எட்டுப் பாடல்கள் இருக்கிறதே என்று சொல்ல வைத்துவிடாதீர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனை நம்பி வெயிட் பண்ண முடியாது!.. ஓப்பனாக பேசி வாய்ப்பை மறுத்த அஸ்வத்!...

Youth: லாபத்தில் பங்கு.. கென் கருணாஸுக்கு கொட்டும் பணம்!.. லக்குன்னா இதுதான்!...

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

Show comments