பெயர் மாறுகிறார் கார்த்திகா!

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2008 (18:09 IST)
கார்த்திகாவுக்கு கல்யாணம், அமெரிக்கா மாப்பிள்ளையை மணக்கிறார் என்றெல்லாம் ஒரு மாதத்திற்கு முன் ஊரெல்லாம் புரளி. அது புரளியல்ல, வெறும் புழுதிதான். மீண்டும் நடிப்பைத் தொடர்கிறார் என நம்பகமான தகவல்கள்.

கருணாஸ் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். மலையாள சீனிவாசன் இயக்கி நடித்த 'வடக்கு நோக்கு எந்திரம்' படம் அதற்கு ரீ-மேக் ஆக தயாராக உள்ளது. இதில் பார்வதி நடித்த வேடத்தில் நடிக்கிறார் கார்த்திகா. அதாவது கருணாசுக்கு ஜோடி.

தமிழில் ஏற்கனவே இன்னொரு கார்த்திகா (இவர் தூத்துக்குடி கார்த்திகா) இருப்பதால் 'நம்நாடு' கார்த்திகா தனது பெயரை மாற்ற உள்ளாராம்.

பெயர் மாறிய பிறகாவது கார்த்திகா வாழ்வில் பிரகாசம் ஏற்படுமா?

கார்த்திகாவுக்கு புதுப்பெயர் தேடும் அதே நேரம், வடக்கு நோக்கு எந்திரத்துக்கும் நல்ல தமிழ்ப் பெயராக தேடிக் கொண்டிருக்கிறார் கருணாஸ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments