தமிழ் திரைப்படம், தொலைக்காட்சிகளுக்கு புதன் முதல் தடை : கர்நாடக ரக்‍ஷனா வேதிகா!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (19:50 IST)
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் அளிக்க வகை செய்யும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்துவரும் கர்நாடக ரக்‍ஷனா வேதிகா அமைப்பு, புதன்கிழமை முதல் தமிழ் திரைப்படங்களும் திரையிடக்கூடாது என்றும், தொலைக்காட்சிகள் ஒளிபரப்பக் கூடாது என்றும் அறிவித்துள்ளது.

கர்நாடக தலைநகர் பெங் க‌ள ூருவில் இன்று கூடிய கர்நாடக ரக்‍ஷனா வேதிகா அமைப்பினர், தமிழ் நாட்டிற்கு கடுமையான செய்தியை தெரிவித்திடவே இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இவ்வமைப்பின் தலைவர் நாராயண கெளடா இதனை அறிவித்துள்ளார்.

புதன்கிழமை முதல் தமிழ் திரைப்படங்களை திரையிடக்கூடாது என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தமிழ் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்று கேபிள் தொலைக்காட்சி இயக்க நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, இரயில், சாலை போக்குவரத்தையும் நிறுத்தி போராடப் போவதாகவும், ஏப்ரல் 11, 12 தேதிகளில் ஓகேனக்கல் சென்று அங்கு போராட்டம் நடத்தப் போவதாகவும் இவ்வமைப்பு முடிவு செய்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

ரஜினி படத்தில் வில்லனாக இயக்குனர் ஷங்கர்!.. தலைவர் 173 அப்டேட்...

திரையரங்குகளில் மீண்டும் தளபதி vs தல மோதல்: இன்று ரீ-ரிலீஸாகும் சிவகாசி மற்றும் அமர்களம்

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

Show comments