ஏறுமுகத்தில் ஸ்ரீகாந்த்!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (18:43 IST)
ரஜினி, கமலை அண்ட முடியாது. விஜய், விக்ரம், அஜித், சூர்யாவுக்கு கோடிகளை அள்ளிக் கொடுக்க வேண்டும். குறைந்த செலவில் தெரிந்த முகமாக தேடுகிறவர்களின் இப்போதைய ஒரே தேர்வு ஸ்ரீகாந்த்!

கல்யாண கலாட்டாவில் காணாமல் போனவரின் கால்ஷீட் டைரியில் இன்று ஹவுஸ்ஃபுல் போர்ட்! பூ, எட்டப்பன், இந்திர விழா படங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போதே பன்னீர் செல்வத்துக்கும் கால்ஹீட் தர சம்மதித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

இவரது ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், கிழக்கு கடற்கரை சாலை படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் பன்னீர்செல்வம். இவர் சொன்ன கதையில் சொக்கிக் போன ஸ்ரீகாந்த், கண்டிப்பா பண்ணுவோம் என வாக்கு கொடுத்திருக்கிறாராம்.

' யோகி'யை இயக்கும் சுப்ரமணிய சிவாவின் அடுத்தப் படத்திலும் ஸ்ரீகாந்த்தான் ஹீரோ. கல்யாண ராசி ஸ்ரீகாந்துக்கு களைகட்டத் தொடங்கியிருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

Show comments