கோயம்புத்தூரில் இனிது இனிது!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (18:35 IST)
ஒளிப்பதிவாளர் கே.வி. குகன் இயக்குனராகும் படம் இனிது இனிது. பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் படத்தை தயாரிக்கிறது.

தெலுங்கில் வெற்றி பெற்ற ஹாப்பி டேய்ஸ் படத்தின் ரீ-மேக்தான் கே.வி. குகனின் படம். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். தெலுங்கு படத்தில் தமன்னா நடித்த வேடத்திற்கும் புதுமுகம் ஒருவரையே தேர்வு செய்துள்ளனர்.

ரீ-மேக் என்றாலும், தமிழுக்குப் பொருந்திவர வேண்டும் என்பதற்காக கதை விவாதம் நடந்து வருகிறது. சென்னை பரபரப்பு மிகுந்த நகரமாகிவிட்டதால் கதை விவாதத்தை கோயம்புத்தூரில் நடத்துகிறார்கள்.

படத்தை இயக்குவதுடன் கே.வி. குகனே ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் போட்டோ செஷன் நடைபெற உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

இளமை திரும்புதே!.. மம்முட்டியின் இளமைக்கு ரகசியம் இதுதான்!..

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

Show comments