சிவாஜி பெயரில் திரைப்படக் கழகம்!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (12:34 IST)
நடிகர் திலகத்தின் புகழ் மகுடத்தில் மேலுமொரு இறகு. காட்டாங்குளத்தூரில் இயங்கிவரும் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சிவாஜி கணேசன் பெயரில் திரைப்படக் கழகம் ஒன்று தொடங்கப்படுகிறது!

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் பச்சமுத்து கூறியதாவது...

ஒரு நடிகர் பெயரில் திரைப்படக் கழகம் கல்லூரியில் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை. சிவாஜி கணேசனின் குடும்பத்தாருடன் இணைந்து இந்த திரைப்படக் கழகம் செயல்படும். திரைப்பட தொழில்நுட்பத்தை உள்ளூர் மற்றும் வெளிநாடு திரைப்பட வல்லுநர்கள் கற்றுத் தருவார்கள். வரும் கல்வியாண்டிலிருந்து திரைப்படக் கழகம் செயல்படத் தொடங்கும்.

விழாவில் சிவாஜியின் மகனும், சிவாஜி புரொடக்ஷனின் நிர்வாக இயக்குனருமான ராம்குமார் கலந்துகொண்டார். எஸ்.ஆர்.எம்.-ன் திரைப்படக் கழகத்துக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுப்போம் என உறுதியளித்தார் அவர்.

கலைத்துறை செய்ய வேண்டியது ஒரு கலைக் கல்லூரி செய்கிறது. வரவேற்போம், வாழ்த்துவோம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

40 வருஷ ரகசியம்! மேடையில் ரஜினியை பற்றி பேசி அழ வைத்த டிஆர்

‘படையப்பா’ டைம்ல ரஜினிக்கு உதவியா இருந்த அந்த நடிகர்! அதான் படம் சூப்பர் ஹிட்

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

Show comments