எழுநூறு பேர் பங்குபெற்ற பாடல் காட்சி!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (13:49 IST)
webdunia photoFILE
நானூறு துணை நடிகர்கள், முன்னூறு கிராமியக் கலைஞர்கள், மொத்தமாக இவர்களை ஒன்று சேர்ப்பதே இமாலய சாதனை. ஒன்று சேர்த்ததுடன் ஒரு பாடலையும் எடுத்திருக்கிறார் இளவேனில், உளியின் ஓசை படத்தின் இயக்குனர்.

கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்க ராஜராஜசோழன் வருவது போலவும், அவரை சோழ குடிகள் பாடல் இசைத்து வரவேற்பது போலவும் காட்சி. நானூறு துணை நடிகர்களுடன் மதுரை பக்கமிருந்து முன்னூறு கிராமியக் கலைஞர்களையும் சென்னை ஃபிலிம் சிட்டியில் இதற்காக ஒன்றிணைத்திருக்கிறார்கள். கலா மாஸ்டர் நடனம் அமைக்க, பாரதிராஜாவின் ஆஸ்தான கேமராமேன் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய பாடலை படமாக்கினார் இளவேனில்.

பாடலின் தொகையறாவை முதல்வர் கருணாநிதி எழுதியிருக்கிறார். இசை இளையராஜா. ராஜராஜனாக சரத்பாபுவும், அவரது மகன் ராஜேந்திர சோழனாக உதயாவும் நடித்தனர்.

முத்தமிழ் அறிஞரின் பாடல், கிராமியக் கலைஞர்களின் ஆடல் என சவுண்டாகவே தயாராகிறது உளியின் ஓசை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

Show comments