எஸ்கேப்பான எஸ்.எம்.எஸ்.!

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (17:55 IST)
ஜெயமோகனின் சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதால் ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள். முக்கியமாக நடிகர் சங்கம். மன்னிப்பு கேட்கவில்லையெனில், விகடன் சம்பந்தப்பட்ட எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு கிடையாது என்று ஒரு வாரம் கெடுவும் விதித்தது.

விகடம் நிறுவனம் இப்போதுதான் தனது முதல் படமான சிவா மனசுல சக்தியை தொடங்கியிருக்கிறது. நடிகர் சங்கம் ஒத்துழைக்க மறுத்தால் ஒரு அடி படத்தைக் கூட எடுக்க முடியாது.

இந்நிலையில், கட்டுரையை பிரசுரித்ததற்கு விகடம் வருத்தம் தெரிவித்துள்ளது. பாரம்பரிமிக்க விகடன் வருத்தம் தெரிவித்தது மன்னிப்பு கேட்ட மாதிரிதான் என்று நடிகர் சங்கத்தினரும் சமாதானம் அடைந்துள்ளனர். சிவா மனசுல சக்தியும் பிரச்சனையிலிருந்து எஸ்கேப்பாகியுள்ளது.

ஜெயமோகன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை. மன்னிப்பு விஷயத்தில் ஜெயமோகன் விஜயகாந்த் கட்சி. தமிழில் ஜெயமோகனுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புதானாம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

சாய்பல்லவிக்கு சம்பளம் ரூ.12 கோடி.. நயன்தாரா, த்ரிஷாவை விட அதிகமா?

விஜய் கெட்டப்பில் நடித்த நட்டி நடராஜ்!.. மோசமாக திட்டும் விஜய் ஃபேன்ஸ்!..

Show comments