குருவியில் வடிவேலு?

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (13:31 IST)
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் ஹீரோவாக நடித்ததால் வடிவேலுவின் கைநழுவிப் போன வாய்ப்புகள் ஏராளம். அதில் ஒன்று குருவி.

இந்திரலோகம் வெளிவந்த நிலையில் மீண்டும் காமெடி வேடங்களில் வடிவேலு பிஸி. விரைவில் இவர் நடித்த கி.மு. வெளிவருகிறது. இந்தப் படம் பழைய பெயரை மீட்டுத்தரும் என நம்புகிறார் வடிவேலு.

இந்திரலோகத்துக்குப் பிறகு காத்தவராயன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படங்களில் நடித்து வருகிறவர், குசேலனில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

விஜயின் குருவியில் நடிக்கவும் வடிவேலுக்கு விருப்பம் உள்ளது. விஜய் - வடிவேலு காம்பினேஷனுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால், படத்தில் வடிவேலை நடிக்க வைக்கும் திட்டம் தளபதிக்கும் உள்ளதாம்.

விரைவில் நல்ல அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள் குருவி யூனிட்டில்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

Show comments