கெட்டப்பை மாற்றிய ஜெயம் ரவி!

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (18:09 IST)
webdunia photoWD
ஜெயம் ரவியின் க்ளீன் ஷேவ் முகத்தில் கரு கரு மீசை. காலையில் எழுந்ததும் ரேஸர் தேடும் ஜெயம் ரவி, மீசை வளர்ப்பது பேராண்மைக்காக. இதில் ஃபாரஸ்ட் ஆ ஃபிசராக வருகிறார் ரவி.

ஃபாரஸ்ட் ஆ ஃபிசர் என்றால் சுள்ளி பொறுக்க வரும் அப்பாவிகளை மிரட்டும் வேடமில்லை. இது வேறு வகை. கட்டுமஸ்தான உடம்பும், கரு கரு மீசையுமாக ரவி செய்யும் சாகஸங்கள் அதகளம். படத்தில் வெளிநாட்டு நடிகர்களும் உண்டு.

மாஞ்சோலை, அம்பாசமுத்திரம் பகுதிகளில் உள்ள அடர்ந்த காட்டில் ஷூட்டிங்கை தொடங்கியிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன். வானில் பிறந்தபடியே படம்பிடிக்கும் ஹெலிகாம் கேமரா, அதிநவீன லென்சுகள் என்று படத்தின் பட்ஜெட் மிகப் பெரியது.

பேராண்மையில் ஐந்து நாயகிகள். இதுவரை ஒருவரைக் கூட தேர்வு செய்யாமல் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள். பேராண்மையில் பெண்மை எதற்கு என்று நினைத்து விட்டார்களோ!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

Show comments