ஏப்ரல் 14 பொம்மலாட்டம்!

Webdunia
திங்கள், 10 மார்ச் 2008 (17:03 IST)
பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ், இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இந்தியில் சினிமா என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்தில் சினிமா இயக்குனராக நானா படேகர் நடித்துள்ளார். அவரது படத்தில் நடிக்கும் நடிகை மர்மமான முறையில் இறக்கிறார். அதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடித்துள்ளார்!

இந்திப் பட உலகின் முன்னணி இசையமைப்பாளரான ஹிமேஷ் ரேஷமய்யா முதல் முறையாக தமிழ்ப் படத்துக்கு (பொம்மலாட்டம்) இசையமைத்துள்ளார். படத்தில் காஜல் அகர்வால், ருக்மணி என இரண்டு நாயகிகள்.

படம் திரைக்கு வரும் முன்பே பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, அதன் திரைக்கதை மற்றும் காட்சிகளுக்காக ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14 பழைய பதினாறு வயதினிலே பாரதிராஜாவை ரசிகர்கள் திரையில் பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

275 நாள் ஓட வேண்டிய படம்.. அஜித் சொன்ன ஒரு வார்த்தை.. ரிசல்ட் இப்படி ஆயிடுச்சு

இதுல வெட்கப்பட ஒன்னும் இல்ல!.. திருந்துங்க!.. கொதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!....

பாருவை ஃபைனலுக்கு அனுப்ப வேண்டும்.. போர்க்கொடி தூக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்

பராசக்தியும் இல்லை.. வா வாத்தியாரும் இல்லை.. 'தலைவர் தம்பி தலைமையில்' தான் பொங்கல் வின்னர்.. கம்பேக் கொடுத்த ஜீவா

"சங்கராந்தி வைப்ஸ்".. கணவருடன் சமந்தாவின் புகைப்படம் வைரல்..!

Show comments