ஸ்ரீகாந்தின் போலீஸ் வேடம்!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (20:30 IST)
ஏறுமுகத்தில் இருக்கிறது ஸ்ரீகாந்தின் சினிமா கிராப். பூ, எட்டப்பன், இந்திர விழா என ஏற்கனவே கை நிறைய படங்கள் இதில் போலீஸ் கதையொன்றூம் சேர்ந்திருக்கிறது.

மன்மோகன் என்ற அறிமுக இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் ஸ்ரீகாந்த். இதில் அவருக்கு போலீஸ் வேடம். அவரது சக அதிகாரியாக பிருத்விராஜ். ஸ்ரீகாந்துக்கு ஜோடி கமலினி முகர்ஜி.

ஸ்ரீகாந்த் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுவது உண்டு. நேரடி தெலுங்குப் படத்திலும் ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். இதனால் மன்மோகன் இயக்கும் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாராக உள்ளது.

விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சத்யமும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் தயாராவது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் வேடத்துக்கு ஏற்றபடி உடலையும், நடையையும் மாற்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியிடம் ஸ்பெஷல் பயிற்சி எடுக்கிறார் ஸ்ரீகாந்த்.

பிருத்விராஜுக்கு ஜோடி தேடும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

Show comments