சஞ்சய் ராமின் ராதை பின்குறிப்பு கண்ணன்!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (20:28 IST)
சஞ்சய்ராமின் பெயர் விரைவில் கின்னஸில் இடம் பெறலாம். குறுகிய காலத்தில் அதிக படங்கள் இயக்கியதற்கு இந்த கெளரவம் கிடைக்கலாம். குறைந்தபட்சம், அதிகப் படங்களுக்கு பூஜை போட்டதற்காவது சஞ்சய்ராமின் பெயர் பரிந்துரைக்கப்படலாம்.

இவர் இயக்கிய 'இயக்கம்' கொஞ்ச நாள் இயக்கமே இல்லாமல் இருந்தது. திடீரென்று போஸ்டர்கள் ஒட்டி விரைவில் ரிலீஸ் என்றார்கள். ஆனால், இதுவரை படம் தியேட்டருக்கு வரவில்லை.

இந்நிலையில் கொம்பு தேவன் என்றொரு படத்தை அறிவித்தார். ஹீரோ தூத்துக்குடி ஹரிகுமார். இந்த அறிவிப்பை படித்து முடிப்பதற்குள் அடுத்த அறிவிப்பு, சஞ்சய் ராம் இயக்கும் சேது சமுத்திரம்!

சமுத்திரத்தின் அலை அடங்குவதற்குள் சிவமயம் படத்தின் அறிவிப்பு. ஹாம், பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள், ஷாமுக்கு ஜோடியாக நடிக்க சினேகாவிடம் பேசி வருகிறார்கள் என்று செய்திகள் வந்துக் கொண்டிருக்கும் போதே, அதிரடியாக அடுத்த அறிவிப்பு. சஞ்சய் ராமின் புதிய படம், ராதை பின்குறிப்பு கண்ணன்.

சஞ்சய் ராம் சார், கின்னஸ் சாதனை வெகு தொலைவில் இல்லை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments