சூப்பர் ஸ்டாருக்கு பதில் சுப்ரீம் ஸ்டார்?

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (20:22 IST)
பின்லேடன் கெட்டப்பில் துப்பாக்கியுடன் ரஜினி இருக்கும் ஜக்குபாய் விளம்பரத்தை மறக்க முடியாது. பாபாவுக்குப் பிறகு ரஜினி நடிக்க இருந்த படம். கே.எஸ். ரவிக்குமார் சொன்ன கதையில் பாட்ஷா சாயல் இருந்ததால் ஜக்குபாயை நிராகரித்து சந்திரமுகிக்கு தாவினார் ரஜினி.

ரஜினி ஜக்குபாயை நிராகரித்தாலும் கே.எஸ். ரவிக்குமாருக்கு நிறைய நம்பிக்கை. யாரை வைத்து இயக்கினாலும் ஜக்குபாய் ஜெயிக்கும் என்று.

தசாவதாரம் முடிந்தபிறகு சரத்குமாரை வைத்து ஜக்குபாய் கதையை வேறு பெயரில் இயக்க இருக்கிறார் கே.எஸ். ரவிக்குமார் என்று கோடம்பாக்கத்தில் பலமான பேச்சு.

ஏற்கனவே ரஜினிக்காக உருவான ஐயா கதையில் சரத்குமார்தான் நடித்தார். ஜக்குபாய் இரண்டாவது கதை. இதில் நடித்தாலும் வெற்றி நிச்சயம்தான். இயக்குவது கே.எஸ். ரவிக்குமாராயிற்றே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments