குஷ்பு படத்தில் முகேஷ்!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (20:03 IST)
வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு தனது படத்தில் வாய்ப்பளித்து வருகிறார் குஷ்பு. விவேக்கை வைத்து யாரும் படம் தயாரிக்காத நிலையில், அவரை தைரியமாக ஹீரோவாக்கியிருக்கிறார். அதேபோன்று தமிழில் நடிக்காமலிருந்த மலையாள நடிகர் முகேஷுக்கு தனது அவ்னி சினி மேக்ஸ் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பளித்துள்ளார்.

அவ்னி சினி மேக்ஸ் 'வீராப்பு' பத்ரி இயக்கத்தில் ஐந்தாம்படை படத்தை தயாரிக்கிறது. ஐந்து முக்கிய கதாபாத்திரங்களைப் பற்றிய கதையிது. சுந்தர் சி, நாசர், விவேக், ஜார்ஜ் ஆகியோருடன், ஜாதிமல்லியின் தன்னுடன் ஜோடியாக நடித்த முகேஷையும் இதில் நடிக்க வைக்கிறார் குஷ்பு.

மலையாளத்திலும் சரியான வாய்ப்பில்லாமல் இருக்கும் முகேஷுக்கு ஐந்தாம்படை எதிர்பாராமல் கிடைத்த வரப்பிரசாதம்!

அடுத்த இன்ப அதிர்ச்சியை குஷ்பு யாருக்கு கொடுக்கப் போகிறாரோ!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments