தமிழுக்கு வரும் கன்னடப் படம்!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (20:01 IST)
தெலுங்குப் படங்கள்தான் புற்றீசலாக தமிழில் மொழிமாற்றமாகி வெளிவருகின்றன. இதில் கன்னடப் படமொன்றும் போட்டியிடுகிறது.

சதிலீலாவதியை கன்னடத்தில் ரீ-மேக் செய்ததன் மூலம் வெற்றிகரமான இயக்குனராகிவிட்டார் ரமேஷ் அரவிந்த். கன்னடத்தில் இவர் இயக்கிய இரண்டாவது படமும், முதல் படம் போல காமெடி படம்தான்.

இதனால் காமெடி இயக்குனர் என்ற பெயர் ரமேஷ் அரவிந்துக்கு. இந்த இமேஜை மாற்ற அவர் இயக்கிய மூன்றாவது படம், ஆக்சிடெண்ட்!

க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார் ரமேஷ் அரவிந்த். சமீப ஆண்டுகளில் எந்தக் கன்னடப் படமும் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டதில்லை.

காவிரி விஷயத்தில் கன்னட திரைத் துறையினர் தமிழக நலன்களுக்கு விரோதமாகவே உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் அரவிந்தின் ஆக்சிடெண்ட் தமிழுக்கு வருவது, விரும்பத்தகாத விபத்து என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments