மீண்டும் அமிதாப் - ரேகா ஜோடி?

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (19:20 IST)
இந்தி சினிமாவின் பிரச்சனையான, பிரகாசமான எவராலும் மறக்க முடியாத ஜோடி, அமிதாப் பச்சன் - ரேகா. அமிதாப், ஜெயா பச்சன் காதலுக்குப் பிறகு இந்த ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை.

கடைசியாக அமிதாப் பச்சனும், ரேகாவும் சில்சிலா படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். யாஷ் சோப்ராவின் இந்தப் படம் வெளிவந்தது 1981-ல்!

ஏறக்குறைய இருபத்தியாறு வருடங்களுக்குப் பிறகு அமிதாப் - ரேகா இணைந்து நடிப்பதற்கான சூழல் கனிந்துள்ளது. சுஜாய் கோஷின் Alladin படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். இதில் நடிக்க ரேகாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.

Alladin- ல் ரேகா, அமிதாப் பச்சன் இணைந்து தோன்றும் சில காட்சிகளும் இடம் பெறுகிறதாம். இதுகுறித்து சுஜாய் கோஷிடம் கேட்டால், எதையும் முடிவு செய்யும்முன் இப்படி கிளப்பி விடுகிறார்களே என்று சொன்னதோடு சரி. அமிதாப்புடன் ரேகா நடிக்கும் செய்தியை மறுக்கவும் இல்லை ஒரேடியாக ஏற்கவும் இல்லை.

மில்லினியம் ஜோடியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனுக்கு சிக்னல் கொடுத்த தணிக்கை வாரியம்!.. விரைவில் ரிலீஸ்?...

யாரு என்ன வேணா சொல்லுங்க!.. ஐ டோண்ட் கேர்!.. திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!..

ரஜினி படத்திலிருந்து விலகியதற்கு அந்த படம் காரணமா?.. சுந்தர்.சி விளக்கம்!..

விஜய் பொறுப்பா நடந்துக்கணும்!.. கல்யாணத்துக்கு கூப்பிட்டவரே திட்டிட்டாரே!...

ரஜினி படம் ஸ்டார்ட்!.. போட்டோ போட்டு செம ஹைப் ஏத்துறாங்களே!...

Show comments