முதலிடத்தில் மிஷ்கினின் அஞ்சாதே!

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (17:53 IST)
சென்னை பாக்ஸ் ஆ ஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது மிஷ்கினின் அஞ்சதே!

நரேன், அஜ்மல், பிரசன்னா நடித்திருக்கும் இந்தப் படத்தின் காட்சிகள், முக்கியமாக பிரசன்னா வரும் பகுதிகள் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.

' கத்தாள கண்ணாலே...' பாடல் வாளமீன் பாடல் அளவுக்கு இல்லையென்றாலும், பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

படம் வெளியான முதல் மூன்று நாட்களில் சென்னை சிட்டியில் மட்டும் பதினாறு லட்சம் வசூலித்துள்ளது அஞ்சாதே. இது விக்ரமின் பீமா, வடிவேலின் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படங்களின் வார இறுதி வசூலை விட அதிகம்.

பத்திரிக்கைகள் அஞ்சாதேக்கு நல்ல முறையில் விமர்சனம் எழுதியிருப்பதால், வரும் நாட்களில் இன்னும் அதிகம்பேர் படம் பார்க்க வருவார்கள் என நம்புவதாக திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலர் தினம் படத்தில் அஜித் நடிக்க வேண்டியதா? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

ரஜினியின் கடைசிப்படம் இதுதான்!.. ரசிகர்களை அப்செட் ஆக்கிய அப்டேட்!...

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

லைகாவிடம் பெற்ற கடன் குறித்த வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி..!

ரஜினி மாதிரி விஜய் இல்ல!.. இதுதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்!. மன்சூர் வேதனை!...

Show comments