த்ரிஷாவால் திணறிய விமான நிலையம்!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (18:47 IST)
ராதாமோகனின் அபியும் நானும் முடியும் தருவாயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சி சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது.

த்ரிஷா வெளிநாட்டிலிருந்து வருவது போலவும், அவரது அம்மாவாக நடிக்கும் ஐஸ்வர்யா த்ரிஷாவை வரவேற்பதாகவும் காட்சி. நூற்றுக்கணக்கில் துணை நடிகர்களை வரவழைத்து சகப் பயணிகளாக நடிக்க வைத்தனர்.

இந்த அதிகப்படியான கூட்டத்தால் விமானப் பயணிகள் திணறிவிட்டனர். சிவாஜி படப்பிடிப்பில் ரஜினியை வேடிக்கைப் பார்த்தது போல், த்ரிஷாவையும் விமான நிலைய ஊழியர்கள் வேடிக்கைப் பார்த்ததால் சில மணி நேரங்களுக்கு விமான நிலையப் பணிகள் ஸ்தம்பித்தன.

விடியற்காலையில் பேக்கப் சொல்லும் வரை இந்த பரபரப்பு நீடித்தது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments