ஷங்கர் தயாரிக்கும் அடுத்த படம்!

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2008 (19:33 IST)
காதல், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, வெயில், கல்லூரி, அறை எண் 305-ல் கடவுள் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் புதிய படமொன்றை தயாரிக்கிறார் ஷங்கர்.

அது என்ன ராசியோ தெரியவில்லை. ஷங்கர் வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்கள் எல்லாருமே சிக்ஸராக அடிக்கிறார்கள். பாலாஜி சக்திவேல் லிங்குசாமியின் திருப்பதி பிரதர் ஸ ¤க்காக படம் இயக்குகிறார். வசந்தபாலன் 'அங்காடித் தெரு' படத்தில் பிஸியாக இருக்கிறார். சிம்புதேவன், ஷங்கர் தயாரிப்பில் 'அறை எண் 305-ல் கடவுள் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் வரிசையில் புதிதாக இணைகிறார் அறிவழகன். மற்றவர்களைப் போல அறிவழகனும் ஷங்கரின் உதவியாளர்தான். அறிவழகன் சொன்ன கதை பிடித்துப்போய் தனது எஸ் பிக்சர்ஸ் கதவை அறிவழகனுக்காக திறந்து கொடுத்திருக்கிறார் ஷங்கர்.

' கல்லூரி' அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்த இடத்தில் தனது படத்துக்கான 'ஸ்கிரிப்ட்' வேலையில் பிஸியாக இருக்கிறார் அறிவழகன்.

படத்தின் பெயரும், நடிகர்களும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments