சினிமாவில் ரங்கநாதன் தெரு!

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (19:01 IST)
இளம் இயக்குநர்கள் கதைக்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை கதைக் களங்களுக்கும் கொடுக்கிறார்கள்.

' வெயில்', 'பருத்திவீரன்', 'பொல்லாதவன்' படங்களில் கதை நடக்கும் பின்புலம் அழுத்தமாகவும், யதார்த்தமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். இந்தப் படங்களில் வெற்றிக்கு இந்தச் சித்தரிப்புகளுக்கு கணிசமான பங்குண்டு.

' வெயில்' படத்தை அடுத்து வசந்தபாலன் இயக்கும் படத்திற்கு 'அங்காடித் தெரு' என பெயர் வைத்துள்ளனர். வணிகம் அதிகளவில் நடக்கும் தெருவை அங்காடித் தெரு என அழைப்பர்.

இந்தப் படத்திற்காக சென்னையின் பரபரப்பான ரங்கநாதன் தெருவை அப்படியே பெயர்த்து எடுத்ததுபோல் அரங்கு அமைந்துள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு இங்குதான் நடைபெற உள்ளதாம்.

' கற்றது தமிழ்' அஞ்சலி நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் மோகன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். திண்டுக்கலைச் சேர்ந்த இவர் ஒரு கால்பந்து வீரராம்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

6 மாதங்கள் தாக்கு பிடிப்போம்.. இதுவரை பழைய ஏவுகணை.. இனிமேல் புதிய நவீன ஏவுகணை.. ஈரான் மிரட்டல்..!

குந்தவையை வீட்டில் குந்த வைக்கணும்.. இல்லனா பிரச்சனை!.. பார்த்திபனுக்கு செம நக்கல்..

Show comments