பிடிச்சிருக்கு பொ‌ங்கலு‌க்கு ‌ரி‌லீ‌ஸ்!

Webdunia
புதன், 26 டிசம்பர் 2007 (10:40 IST)
லிங்குசாமியின் உதவியாளர் இயக்கியுள்ள படம் பிடிச்சிருக்கு. முருகா படத்தில் அறிமுகமான அசோக்தான் ஹீரோ.

அவருக்கு ஜோடியாக மும்பை மாடல் விஸாகா நடிக்கிறார். அதன் பிறகு படத்தில் தெரிந்த நடிகர் என்றால் கஞ்சா கருப்பு மட்டும்தான்.

இந்தப்படத்தை வருகிற பொங்கல் அன்று ரிலீஸ் பண்ணப்போகிறார்கள். ஏற்கனவே..பிரிவோம் சந்திப்போம ், காள ை, ஆயுதம் செய்வோம ், வாழ்த்துகள ், இந்திரலோகத்தில் நா.அழகப்பன ், தங்கம ், பழன ி, சந்தோஷ் சுப்ரமண்யபுரம் அல்லது தாம் தூம் என வரிசையாக பெரிய படங்களும் வருகிறது.

இந்தக்கூட்டத்தில் வருவது தற்கொலை முயற்சி இல்லையா என்று கேட்டால்... அதுபற்றி கவலை இல்லை எங்கள் படத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

தவிர...என்ன நடந்தாலும் ப்ளான் பண்ணின தேதிக்கு படத்தை ரிலீஸ் பண்ணலேன்னா அது ப்ரெஸ்டிஜ் இஸ்யூவாகிடும் என்கிறார் படத்தின் தயாரிபாளர் செண்பக‌க்குமார்.

அமெரி‌க்கா வாழ் இந்தியரான இவர் வருகிற 2008ல் ஐந்து பெரிய படங்கள் தயாரிக்க இருக்கிறார்.

கூல் புரடக்ஷன் பேனரில் வெளிவரும் பிடிச்சிருக்கு படத்துக்காக சென்னை முழுக்க கிட்டத்தட்ட 100 வினயல் போர்டுகள் வைத்திருக்கிறார்கள்.

இது அஜித ், விஜய ், சிம்பு படங்களுக்கு வைப்பதைவிட சற்று அதிகம்.

அடேங்கப்பா!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை.. விஜய் கட்சியில் சேர்கிறாரா?

'துரந்தர்' ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால் 14 நிமிடங்களை கட் செய்தது நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?

விஜயகாந்துக்கு அந்த நடிகை செட்டாகுமா? நல்ல வேளை படம் தப்பிச்சுச்சு..

ஏஆர் ரஹ்மான் சிறுபான்மையினர்.. ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையினரா? சீமான் கேள்வி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

Show comments