பிரிவோம் சந்திப்போம் படத்தை தயாரிக்கும் ஞானம் பிலிம்ஸ் நிறுவனத்தினர் அடுத்து மாதவனை வைத்து ஒரு படம் தயாரிக்கப்போகிறார்கள்.
webdunia photo
WD
எவனோ ஒருவன் படத்தை இயக்கிய நிஷிகாந்த் இப்படத்தை இயக்குகிறார். படம் முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்கப்பட இருக்கிறது. காதலும் ஆக்ஷனும் கலந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியிலிருந்து ஆரம்பமாக இருக்கிறது.
இதில் கதாநாயகி யார் என்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். கமலஹாசன் மகள் ஸ்ருதி கமலஹாசன்தான்.
நல்ல ஹீரோ படத்தில் நடிக்கவேண்டும் என்று காத்திருந்தவரிடம் ஒரு பெரிய தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.