Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மபிரியாவுடன் சமரச‌த்து‌க்கு தயா‌ர்: இய‌க்குன‌ர் சா‌‌மி!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (13:02 IST)
'' நடந்த சம்பவங்களை மறந்து நடிகை பத்மபிரியா சமரசத்துக்கு முன்வந்தால் நானும் சமரசத்துக்குத் தயார ்'' எ‌ன்று இய‌க்குன‌ர் சா‌மி கூ‌றினா‌ர்.

" மிருகம்'' ‌திரை‌ப்ப‌ட‌த்‌தி‌ன் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தியதால் 2 நா‌ளி‌ல் தயாரிப்பாளருக்கு ரூ.2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண நடிகர் சங்கம், இய‌‌க்குன‌ர்க‌ள் சங்கம், பெப்சி ஆகியவற்றில் முறையிடுவேன் எ‌ன்று இய‌க்குன‌ர் சா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

படப்பிடிப்பை தொடருவதற்கான தடையை விலக்கிக் கொள்ளாவிட்டால் எனது படப்பிடிப்பு குழுவினருடன் மதுரை செ‌ன்று காலவரையற்ற உண்ணாவிரததத்தில் குதிப்பேன ். எங்களிடம் கருத்து கேட்காமல் பத்மபிரியா புகாரை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு தலைபட்சமாக நடவடிக்கையில் இறங்கி படப்பிடிப்பை நிறுத்தி இருக்கிறார்கள் எ‌ன்று சா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பத்மபிரியா படப்பிடிப்பில் மோசமாக நடந்துகொண்டதா‌ல் காட்சி சிறப்பாக அமைய‌வி‌ல்லை. அவ‌ர் ச‌ரியாக ஒத்துழைக்கவில்லை. அந்த அளவுககு கடினமாக நடந்து கொண்டார் என இய‌க்குன‌‌ர் புகா‌ர் கூ‌றினா‌ர்.

பிரச்சினையை திசைதிருப்பவே என் மீது அபாண்டமான புகார்களை ப‌த்ம‌பி‌ரியா கூறியிருக்கிறார். இதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டேன். நடந்த சம்பவங்களை மறந்து பத்மபிரியா சமரசத்துக்கு முன்வந்தால் நானும் சமரசத்துக்கு வரத்தயார் எ‌ன்று இய‌க்குன‌ர் சா‌மி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments