வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி நடிகை பூ‌மிகாவு‌க்கு‌ ‌திருமண‌ம்!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (10:25 IST)
பிரபல த‌மி‌‌ழ் நடிகை பூ‌மிகாவு‌‌க்கு‌ம், மு‌‌‌ம்பையை சே‌ர்‌ந்த யோகாசன ‌நிபுண‌ர் பர‌த் தா‌க்கூரு‌‌க்கு‌ம் வரு‌ம் 25‌ஆ‌ம் த‌ே‌தி மு‌ம்பை‌யி‌ல் ‌திருமண‌ம் நடைபெறு‌கிறது.

மு‌ம்பைய ை சே‌ர்‌ந்தவ‌ர ் நடிக ை பூ‌மிகா. இவ‌ர ், த‌மி‌ழி‌ல ் ரோஜ ா கூ‌ட்ட‌ம ் எ‌ன் ற பட‌த்‌தி‌ன ் மூல‌ம ் அ‌றிமுக‌ம ் ஆனா‌‌ர ். ‌‌ பி‌ன்ன‌ர ் நடிக‌ர ் ‌ விஜ‌யுட‌ன ் ப‌த்‌‌ர ி, சூ‌ர்யாவுட‌ன ் ‌ சி‌ல்லெ‌ன்ற ு ஒரு காத‌ல் ஆ‌கிய பட‌ங்க‌ளி‌ல் நடி‌‌த்து‌ள்ளா‌ர். தெ‌லு‌ங்கு, இ‌‌ந்‌தி உ‌ள்பட ஏராளமான ப‌ட‌ங்க‌‌ளி‌ல் நடி‌த்‌து‌ள்ளா‌ர். நடிகை பூ‌மிகாவ ும், மும்பையை சேர்ந்த யோகாசன நிபுண‌ர் பரத் தாக்கூரு‌ம் கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் வரு‌ம் அக்டோபர் மாதம் 25ஆ‌ம் தேதி திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து உள்ளனர். மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இத‌ற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருமணத்துக்கு இரு குடும்பத்தினருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. வரவேற்பு ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

திருமண செய்தியை நடிகை பூமிகாவும், பரத் தாக்கூரும் உறுதி செய்து உள்ளனர். இன்னும் 15 நாளில் பத்திரிகையாளர்களை அழைத்து இதுபற்றி முறைப்படி அறிவிப்போம் என்று அவர்கள் கூ‌றின‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..