குறைந்த பட்ஜெட் படத்தை இயக்கும் கௌதம் மேனன்!

Webdunia
கௌதம ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் நடந்திருக்கிறது. இதற்கிடையில் சூர்யா, ஹரி இயக்கத்தில் வேல் படத்தில் நடிக்கிறார்!

சூர்யா வேல் படத்தை முடித்துக் கொண்டு வருவதற்குள் தான் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை தயாரித்து இயக்கி விடலாம் என்று களம் இறங்கிவிட்டார் கௌதம் மேனன்.

இதை கேள்விபட்ட சூர்யா நீங்கள் அந்த படத்தை முடிக்க லேட்டாகுமே. நான் வேண்டுமானால் வேறொரு படத்தில் நடித்து விட்டு வரட்டுமா என்று கௌதமிடம் கேட்டிருக்கிறார். நீங்கள் வேல் படத்தை முடித்துக் கொண்டு வரும்போது நான் கண்டிப்பாக இந்த படத்தை முடித்துவிடுவேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம் கௌதம்.

பிறகு சூர்யா சமாதானமாகி சரியென்றிருக்கிறார். கௌதம் மேனன் இயக்கும் படத்தில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படத்தை 45 நாளில் முடித்துவிடுவாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments