Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பை ஏற்படுத்தியவர்கள்!

Webdunia
பாடலாசிரியர ், தயாரிப்பாளர ், இயக்குநர் என்று கிளைபரப்பிய பஞ்சு அருணாச்சலம் அவர்களின் மணிவிழா கொண்டாடப்பட்டது. அவரால் வாழ்வுபெற்ற பலநடிகர்கள் நிகழ்ச்சி வராமல் போனாலும் படைப்பாளிகள் பட்டையைக் கிளப்பிவிட்டார்கள்.

கடன் பிரச்சினையிலிருந்து மீளமுடியாத ஆர்.கே. செல்வமணி ஒரு வழியாக மீண்டு சொந்தப்படம் எடுப்பதற்காக `செம்ப ா' என்றொரு படத்திற்கு பூஜை போட்டார். மம்முட்டி நடிப்பதாக இருந்த இந்தப்படம் பூஜையோடு நின்றுவிட்டது.

ஷங்கர் - கமல் கூட்டணியில் மீடியா ட்ரீம்ஸ் தயாரிப்பதாக இருந்த `ரோப ோ' படம் பற்றி பெரிய அளவில் பேச்சு இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார் ஷங்கர்.

திரைக்கு வெளியே காதலித்துக்கொண்டிருந்த சிம்ரன் - ராஜுசுந்தரம் ஜோடியை திரையிலும் காதலர்களாக்கி ஒரு படத்தை தயாரித்தார் இயக்குநர் மனோஜ்குமார். கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐ லவ்யூ டா படம் இன்னும் முடிவடையவில்லை. காரணம் - சிம்ரன் தேதி இல்லாததுதான் என்கிறார்கள்.

கவர்ச்சி நடிகை விசித்ரா பல்வேறு நபர்களோடு கிசுகிசுக்கப்பட்ட நடிகை. ஆனால் யாருமே எதிர்பார்க்காத மாதிரி சினிமாவுக்கு தொடர்பில்லாத கேரள வாலிபரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோருக்கு இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் தனிக்குடித்தனம் இருக்கிறார்.

இதேபோல் இன்னொரு கவர்ச்சி நடிகையான அல்போன்சாவும் காதல் திருமணம் செய்துகொணடார். மலையாள செக்ஸ் படங்களில் நடித்துக்கொண்டிருந்த உஸ்மான் என்ற இளைஞர்தான் இவரது கணவர். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு மனைவி குழந்தைகள் உண்டு. பெற்றோருக்கு உடன்பாடில்லாததால் அல்போன்ஸாவும் கணவரோடு தனிக்குடித்தனம் போயிருக்கிறார்.

குஜராத் பூகம்ப நிதிக்காக சினிமா கலைஞர்கள் பலரும் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து நிதிதிரட்டி பெரிய தொகை ஒன்றைக் கொடுத்துதவினார்கள்.

சிட்டிசன் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்தால் பதினைந்து நாளுக்கு மேலாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமலிருந்தவர் அஜீத். மிகப்பெரிய ஆபரேஷன் நடந்து நாற்பத்தைந்து நாள் ஓய்விலிருக்க வேண்டும் என்று டாக்டர்கள் வற்புறுத்தியும் உடனடியாக ஷீட்டிங்குக்கு திரும்பிவிட்டார்.

கிறுத்தனமாக ஏதாவது செய்து அடிக்கடி நியூஸில் அடிபடுகிற நடிகர் மன்சூர் அலிகான். சினேகா என்ற இளம்பெண்ணைக் கெடுத்துவிட்டதாக எழுந்த புகாரில் அரெஸ்ட் செய்யப்பட்டு விடுதலையானார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?