Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் ஆரோக்கியமான போக்கினை ஏற்படுத்திய 2001-ம் ஆண்டு!

Webdunia
2001- ம் ஆண்டு உலக வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு. ஒரு நூற்றாண்டின் தொடக்கம் என்பது மட்டுமல்ல. . . பல எதிர்பாராத நிகழ்வுகளையும ், பரபரப்பையும் ஏற்படுத்திய ஆண்டு. உலக போலீஸ்காரர்கள் என்று சொல்லப்படும் அமெரிக்க அரசை அதிர வைத்தது. அதன் தொடர்பாக போர ், உயிர்ச்சேதங்கள ், இந்திய பாராளுமன்றத்துக்குள் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்தது என்று எக்கச்சக்கம். அதே போல் தான் தமிழ் சினிமாவிலும ், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ட்ரெண்ட் மாறும் என்பதை நிஜமாக்குவது மாதிரியான போக்குகள் இந்த ஆண்டில் இருந்திருக்கிறது. கதாநாயகன் மட்டும்தான் ஒரு படத்தோட வெற்றிக்கு காரணம். மத்தப்படி கத ை, தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாம் யாராக இருந்தாலும் கவலையில்லை என்ற நிலை மாறி. . . கதைதான் ஹீர ோ, நல்ல இயக்கனர் இருந்தால்தான் ஒரு படம் வெற்றி பெற முடியும் என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது வரவேற்கத்தக்கது!

கமல ், விஜய்காந்த ், அஜீத ், விஜய ், பிரசாந்த ், மாதவன் என்று வியாபார உத்தரவாதமுள்ள ஹீரோக்களின் படங்கள் கூட மிகப்பெரிய சரிவைச் சந்திக்கின்றது. எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் ஜெயித்த படங்கள் என்று பட்டியல் போட்டால். . . வருடத்தின் தொடக்கத்தில் வந்த ஃபிரெண்ட்ஸ ், அப்புறம் மின்னல ே, ஆனந்தம ், டும் டும் டும ், தில ், மிடில் கிளாஸ் மாதவன ், சாக்லெட ், நந்த ா, தவச ி, அழகான நாட்கள ், காச ி, மஜ்ன ு, கடல்பூக்கள ், சமுத்திரம் இந்தப் பத்துப் படங்களிலும் கதைதான் ஹீரோ. எந்தவிதப் பாசாங்குமில்லாமல் ஓரளவு யதார்த்தத்தை நோக்கி பயணப்பட்ட படங்கள். தவிர. . . சாக்லெட ், மஜ்ன ு, அழகான நாட்கள் மூன்றையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மற்ற ஒன்பது படங்களுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கும். என் ன? கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்துப பின்னப்பட்ட படங்கள். நாகரீக வாழ்க்கைக்குள் தொலைந்துபோன இன்றைய ரசிகனுக்கு இதுமாதிரியான படங்கள் மிகப் பெரிய ஆறுதலையும ், சந்தோஷத்தையும் கொடுக்கிறது என்பதற்கு இந்தப் படங்களின் வெற்றி சரியான உதாரணம். சினிமா தொடங்கிய காலம் தொட்டே மனித உணர்வுகளையும ், தொலைந்துபோன கலாச்சாரங்களை மீட்டெடுக்கிற மாதிரியான படங்கள் மட்டும ே, காலம் காலமாக வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன.

விதண்டாவாதம் பேசுகிற சிலர் ஆக்ஷன் படங்களுக்கும ், ஆக்ஷன் ஹீரோக்களுக்கும்தான் எப்போதும் மார்க்கெட் என்று சொல்வதுண்டு அதெல்லாம் சும்மா பம்மாத்து. தேர்தல் நேர வாக்குறுதிகள் மாதிரி நிரந்தரமற்றது! தீன ா, வாஞ்சிநாதன ், ரிஷ ி, பத்ர ி, சிட்டிசன ், தோஸ்த ், நரசிம்ம ா, ஸ்டார ், ஆளவந்தான ், ஷாஜகான் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் எல்லாமே லாபகரமான படமாகவோ அனைத்து ரசிகனையும் திருப்திபடுத்துகிற படமாகவோ இல்லை! இந்தப் பட்டியலிலுள்ள சில படங்கள் மட்டும் போட்ட முதலீட்டை எடுத்துக் கொடுத்திருக்கிறது. மற்றதெல்லாம் திட்டமிட்டு ஓட்டப்பட்ட படங்கள்தான். வெற்றிப்பட எண்ணிக்கையைக் கூட்டிய படங்களே தவிர வெற்றிப்படங்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளக்கூடிய படங்கள் இல்லை!


கடந்த ஆண்டைவிட இந்தவருடம் படங்களின் எண்ணிக்கை அதிகம். 2000-த்தில் ஐம்பத்தைந்து படங்கள் மட்டுமே வந்தன. இந்த ஆண்டு எண்பத்தொன்றாக உயர்ந்திருக்கிறது! இதற்கு காரணம் - குறைந்த முதலீட்டுப் படங்கள் அதிகரித்ததுதான். இதுமாதிரியான படங்கள் பண்ணும்போது வெகு சிலரே சரியாகப் பண்ணியிருக்கிறார்கள். பெரும்பாலான தயாரிப்பாளர்கள் அவசரகோலத்தில் அள்ளிப்போட்ட மாதிரி ஏனோ தானோவென்று பண்ணியதால் போட்ட முதலைக்கூட எடுக்காமல்விட்டது அதிகம். இந்த வரிசையில் வந்த படங்களில் மிகப் பெரிய பாராட்டைப் பெற்ற படம் - குட்டி. வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் தமிழ் சினிமாவின் தரம் உயர காரணமாக இருந்திருக்கிறது. தவிர இந்தப்படத்தை இயக்கிய நபர் ஒரு பெண். ஜானகி விஸ்வநாதன் ; பத்திரிகை துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் இவர்.

குட்டி குழந்தைத் தொழிலாளர் பற்றிய கதை! வழக்கமான பட்டாசுகள் வெடிக்காமல் அடுக்குமாடிக் கட்டத்துக்குள் வைத்து மனசு கனத்துப் போகிற மாதிரி சொல்லியிருந்தார். நல்ல முயற்சி! இதே போல் குழந்தைகளின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிற மாதிரியான படம் மீடியா ட்ரீம் தயாரித்த நிலாக்காலம். இதில் நடித்த பொடியன் மாஸ்டர் உதயராஜுக்கு தேசிய விருது கிடைக்கிற அளவுக்கு அழுத்தமான படம். மூன்றாவத ு, விடுதலை போராளிகளைப் பற்றிய `காற்றுக்கென்ன வேல ி' படம். கிடைத்த வசதிகளை வைத்துக் கொண்டு அற்புதமாகப் பண்ணப்பட்ட படம். சென்ஸார் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாது என்று பலத்த எதிர்ப்புகளைக் காட்டியது. மிகப் பெரிய போராட்டத்துக்குப் பிறகு அந்தப் படத்தை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார் அதன் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்! குறைந்த முதலீட்டுப் படங்களில் வியாபார ரீதியாக வெற்றிபெற்றது இரண்டே இரண்டு படங்கள்தான். ஒன்று - மிடில்கிளாஸ் மாதவன். இரண்டு - ராமராஜன் நடித்து வெளிவந்த `பொன்னான நேரம ்'. . .

நல்ல கதைகளுக்கு வரவேற்பு இருந்தாலும் இன்னொரு பக்கம் ரீமேக் படங்களின் ஆதிக்கமும் அதிகம். ஃப்ரெண்ட்ஸ ், பிரியாதவரம் வேண்டும ், பத்ரி கண்ணா உன்னைத் தேடுகிறேன ், காசி எல்லாமே மலையாளம ், தெலுங்கிலிருந்து வந்த கதைகள்.

தவிர இந்த வருடத்தில் வெளியான படங்கள். இப்போது தயாரிப்பிலுள்ள சில படங்களை இயக்கிக் கொண்டிருப்பவர்கள் மலையாள இயக்குனர்கள். வேறு எந்த வருடத்திலும் இல்லாத அளவு மலையாளத்திலிருந்து நிறையப்பேர் தமிழுக்கு வந்திருக்கிறார்கள். சித்திக ், ஷாஜிகைலாஷ ், கமல ், வினயன ், ரஃபி மெக்கார்டின் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கலைஞர்களுக்கு மொழி ஏது என்று தேசிய கண்ணோட்டத்தோடு பார்த்தால் இது சரி என்றாலும் இன்னொரு வகையில் வருத்தத்திற்குறிய விஷயம்.

எப்பட ி? தமிழில் நல்ல கதைகளோடு எவ்வளவோ இளம் இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வியாபாரம் என்ற காரணத்தைக் காட்டி இவர்களை ஒதுக்கி வைத்துவிடுகிற கொடுமை தமிழ் சினிமாவில் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டுரையின் மூன்றாவது பாராவில் சொன்னமாதிரி எந்தவொரு தனிமனிதனுக்கும் நிரந்தரமான வெற்றி கிடையாது. தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்கள் கொடுத்த ஷங்கர் இயக்கிய நாயக் (இந்தி) வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இப்போதைய இளம் இயக்குனர்களின் ஆதர்ஷ புருஷன் என்று சொல்லப்படுகிற பாலசந்தரின் நூறாவது படம் தோல்வி. இப்படி உதாரணங்கள் சொல்ல நிறைய முன்னோடிகள் இருக்கிறார்கள்.

வெற்றி பெற்றவர்களைப் பார்ப்போம் லிங்குசாமி என்றொரு இளைஞன் கும்பகோணத்திலிருந்து கிளம்பி வந்தவர். மார்க்கெட் சரிந்த நிலையிலிருந்த முரள ி, அப்பாஸ ், நல்ல நடிகராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களால் இன்றும் முழுசாக ஏற்றுக் கொள்ளப்படாத நடிகர் மம்முட்ட ி, ரம்ப ா, தேவயான ி, ஸ்நேகா என்று கூட்டணி அமைத்து `ஆனந்தம ்' என்றொரு மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார். சிரம திசை நோக்கிப் போய்க் கொண்டிருந்த தயாரிப்பாளர் சௌத்ரிக்கு ஆறுதலாக இருந்த படைப்பு இது! அதன் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன்பக்கம் இழுத்துக் கொண்டாரே எப்பட ி? இந்த வருடத்தின் பிற்பகுதியில் வந்த `தில ்' படத்தின் இயக்குனர் தரணி யார ்? ஏற்கனவே `எதிரும் புதிரும ்' என்றொரு படத்தைக் கொடுத்தவர். நீண்ட இடைவெளிக்கப்புறம் வந்தாலும் பொட்டில் அடித்தமாதிரி ஒரு கதை பண்ணி ஜெயித்திருக்கிறாரே! இப்படித் திறமைகளோடு அலையும் இயக்குனர்கள் இங்கு ஏராளம். கர்நாடகாவில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த கதாசிரியர்களை அனுமதிப்பதில்லை என்கிறார்கள். இது இனவெறியைத் தூண்டும் விஷயமல்ல. . . தன் மொழி மீத ு, தன்னோடு இருக்கும் இளைஞனின் எதிர்காலம் இருண்டு போகக்கூடாது என்கிற எதிர்காலத்திட்டத்தின் வெளிப்பாடு!

நீங்களும் அதைச் செய்வதில் என்ன தப்ப ு?!

பதினைந்து ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு முழு வேகத்தோடு கிளம்பியிருக்கும் நடிகர் விக்ரமிற்கு இந்த வருடம் அற்புதமான ஆரம்பம். சேதுக்கப்புறம் வெளிவந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் விக்ரமின் தகுதியை ஆட்டிப் பார்க்கிறமாதிரி இருந்தது. அதை தில ், காசி என்ற படங்களின் மூலம் அடித்து நொறுக்கியிருக்கிறார். இதேபோல் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்ட இன்னொரு நடிகர் சூர்யா! ஃபிரெண்ட்ஸ ், நந்தா இரண்டுமே அழுத்தமான நடிப்பை வெளிக்காட்டக்கூடிய வாய்ப்புகளாக அமைந்த படங்கள். கைவசம் இருக்கும் படங்களை கணக்குப் போட்டால் அடுத்த ஆண்டு இந்த இருவரின் கொடிதான் உச்சத்தில் பறக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது!

அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று ரஜினி சஸ்பென்ஸ் வைத்தமாதிரி பட்டும் படாமலும் பேசிவந்த விஜயகாந்த் படீரென்று உடைத்து வெளிவந்திருக்கிறார். தனிக்கட்சிக்கான ஆழம் பார்க்க ரசிகர் மன்றங்களைக் கடந்த தேர்தலில் களம் இறக்கிவிட்டார் எதிர்பார்த்ததைவிட ரெஸ்பான்ஸ் அதிகம்! எந்த ஒரு தொகுதிக்கும் விஜயகாந்த் போகாமலேயே இந்த வெற்றி என்றால் தமிழ்நாடு முழுக்க இவர் முகம் காட்டினால் போதும். . . இன்னொரு எம்.ஜி.ஆர். என்கிறார்கள் தெக்கச்சி மக்கள்.

அதற்கேற்றவாறு காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறார் விஜயகாந்த்!

சிம்ரன ், ஜோதிகா இருவரையும்விட இந்த வருடம் முன்னணியில் இருப்பது லைல ா, ஸ்நேகா இருவரும்தான்! லைலாவுக்காவது சொல்லிக்கொள்ள இரண்டு படங்கள் இருக்கிறது. (தில ், நந்தா) ஸ்நேகாவுக்கு அதுவுமில்லை. சிம்ரன் காதல ், கால்ஷீட் குழப்பம் என்று தடுமாறிக் கொண்டிருப்பதால் அந்த வாய்ப்பு ஸ்நேகாவுக்கு கிடைக்கிறது. ஜோதிகாவுக்கு பதில் லைலா. இதல்லாமல் அடுத்த ஆண்டுக்கென்று மலையாள இறக்குமதி சம்யுக்தா வர்ம ா, காவ்யா மாதவன் என்றொரு இளமைப் பட்டாளம் இருக்கிறது. மீன ா, ரோஜ ா, அபிராமி போனற்வர்களுக்கு இந்த வருஷம் சொல்லிக் கொள்வது போல் ஒன்றுமில்லை. ஒரு பாட்டுக்கு ஆடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த மீனா ஷாஜகான் படத்தில் ஆடியதன் மூலம் எப்படியும் நடிக்கத் தயார் என்று சொல்கிறமாதிரி இருக்கிறது. ஒருவேளை இது நல்ல பலனைக் கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை! ரம்பாவுக்க ு` த்ரீ ரோசஸ ்' மட்டுமே எதிர்காலத்தைத் தீர்மானிக்கற படமாக இருக்கும்! பொதுவாகவே இந்த வருடத்தில் நடிகைகள் யாரும் பிரம்மாதமாக நடித்தார்கள் என்று சொல்வதற்கு ஒரு படமும் இல்லை. இருவரைத்தவிர... ஆனந்தம் படத்தில் தேவயான ி, காசியில் காவேரி!

ஒன்றில் குடும்பபாரத்தைக் கணவனுக்காக சுமக்கிற பெண்ணாக தேவயானி. இன்னொன்றில் காதலுக்காக கற்பை இழந்து தவிக்கிற ஊமைப் பெண்ணாக காவேரி. இருவரில் யார் என்று பார்த்தால் முதலிடம் காவேரிக்கு என்பதில் சந்தேகமில்லை!

இவர்கள் எல்லாரையும்விட `அதிக பாப்புலாரிட்ட ி' கிடைக்கப்பெற்ற நடிகை மும்தாஜ ், ஸ்டார ், சாக்லெட் என்று இந்த வருடம் ரவுண்டுகட்டி அடித்திருக்கிறார். முன்னணிக் கதாநாயகிகள் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை ஒரே ஒரு பாடலுக்கு வாங்குகிற அளவுக்கு இவர் உயரம் தொட்டிருக்கிறார்.

மற்றபடி சினிமாவில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை. பிரப ு, சத்யராஜ ், அர்ஜுன ், கார்த்திக ், பிரபுதேவா எல்லோருக்குமே வழக்கமான வருஷம்தான். புதிய முயற்சி என்ற கணக்கில் பார்த்தால் 12 பி. கேமெராமேன் ஜீவா இயக்குநராக அறிமுகமாகிய படம். இது நடந்தால் இப்படி.. நடக்கவில்லை என்றால் என்னவாகும் என்கிற ஹாலிவுட் யுக்தியை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த முயற்சி தோல்வி என்றாலும் இன்னொரு மாறுதலுக்கான விதை போட்ட முதல்படம் என்பதற்காகப் பாராட்டலாம். அடுத்து ஆளவந்தான். வழக்கமான இரண்டு வேடங்கள் என்றில்லாமல் உடல ், நடவடிக்கை அத்தனையும் மாற்றிக் காட்டியிருப்பார் கமல்! அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட படம் இது. ஆனால் ரசிகனுக்கு அது முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பது சோகம்!

இந்த ஆண்டின் மிகப்பெரிய கறுப்புநாளாக அமைந்தது நடிகர் திலகம் செவாலியே சிவாஜி அவர்களின் மறைவு! நாற்பதாண்டுகளுக்கு தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி உலக அரங்கையே அதிரவைத்த கலைஞன் காற்றோடு கலந்துபோனது கலைக்கு ஏற்பட்ட பேரிழப்பு!

ஆச்சர்யப்பட வைத்த செய்தி : இயக்குநர் ராஜகுமாரன் - தேவயானி காதல் திருமணம். அரசல் புரசலாகச் செய்திகள் வந்தாலும் திடீரென்று வீட்டைவிட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்டார் தேவயானி. இந்தத் திருமணம் இவரது சினிமா வாழ்க்கையை ஆட்டிப்படைத்துவிடும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்க.. அதை சாமர்த்தியமாக உடைத்தெறிந்திருக்கிறார். அப்புறம் எந்த வருடத்திலும் இல்லாமல் இந்த வருடம் நிறைய நடிகைகள் சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்கள். சுவலட்சும ி, வசுந்தராதாஸ ், குஷ்ப ு, ரோஜ ா, சீதா பார்த்திபன ், மதுபாலா என்று நீண்ட பட்டியல் போகிறது!

அதே போல் புதிது புதிதாக நடிகைகளும் அறிமுகமாகியிருக்கிறார்கள். `அணுஸ்ர ீ, ரீமாசென ், மோனல ், பூமிக ா, மோனிஷ ா, காவேர ி, நேக ா, காயத்ரி ஜெயராம ், ரிச்சாபாலோட ், காவ்யாமாதவன ், ரிங்கி கண்ண ா, யுத்தாமுகி தவிர ஒன்றிரண்டு காட்சிகளுக்கு மட்டுமே வந்துபோன நடிகைகள் என எண்ணிக்கை நீளமாக இருந்தாலும்.. அங்கீகரிக்கப்பட்ட நடிகைகள் என்று பார்த்தால் மோனல ், பூமிக ா, காவேரி என்று சிலர்தான் தேறுகிறார்கள். ஒருவேளை அடுத்தாண்டு இவர்கள் முன்னிலைக்கு வந்தாலும் வரலாம்!

இளம் நடிகர்களில் அஜீத ், விக்ரம ், விஜய ், பிரசாந்த ், சூர்ய ா, மாதவன் என்று குறிப்பிட்ட சிலர்மட்டுமே கொடிகட்டிக் கொண்டிருந்த நிலையில் புதிதாக பல இளம் ஹீரோக்கள் கிடைத்திருக்கிறார்கள். 12 பி ஷாம ், ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த ், ஜூன் ஜூலையில் நடித்துக் கொண்டிருக்கும் ஜீவா இவர்களில் முதல் இரண்டு பேருக்கும் சரியான எதிர்காலம் இருக்கிறது. ஒருவேளை இவர்களும் வழக்கமான ஃபாண்டஸி கதைக்குள் சிக்கிக் கொண்டால் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பது இந்த வருஷம் கொஞ்சம் அழுத்தமாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பலர் சட்டமன் ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு மூன்றுபேர் பதவி வகிக்கிறார்கள். சரத்குமார ், எஸ்.எஸ். சந்திரன் இருவரும் ராஜ்யசபா எம்.பி.க்களாக கௌரவிக்கப்பட்டவர்கள். நடிகர் நெப்போலியன் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொகுதியான வில்லிவாக்கம் தொகுதியில் நின்று ஜெயித்து எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறார்!

மொத்தத்தில் மிகப்பெரிய சோகத்தையும் சில சந்தோஷங்களையும் அள்ளிக் கொடுத்திருக்கிறது 2001-ம் ஆண்டு.

தொகுப்பு : வீ.கே. சுந்தர்.


எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மெய்யழகன் படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

அந்த பெண்தான் என்னை டார்ச்சர் செய்தார்… குற்றச்சாட்டுகளை மறுத்த ஜானி மாஸ்டர்!

பிரபாஸ் படத்தில் வில்லன், வில்லியாக சைஃப் அலிகான் & கரீனா கபூர்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவரா?

பூஜா ஹெக்டேவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா 44 படக்குழு!

Show comments