Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தர்.சி.யை மிரட்டிக் காதலிக்கும் கோபிகா

Webdunia
லாரி டிரைவர் புலிப்பாண்டி மீது அதே ஊரைச் சேர்ந்த ஸ்கூல் டீச்சர் பாரதிக்கு தீராத காதல். புலிப்பாண்டியைப் பார்க்கும் போதெல்லாம் தன் காதலை அவனிடம் சொல்கிறாள். புலிப்பாண்டியோ அவளது காதலை ஏற்றுக் கொள்ளாதவன் போல் விலகி விலகி செல்கிறான். பாரதியோ அவனை துரத்திக் கொண்டே இருக்கிறாள்.

ஒரு நாள் புலிப்பர்ணடியை சந்திக்கும் பாரதி குறிப்பிட்ட ஒரு தேதியைச் சொல் ல, " அந்த நாளில் நீயே என்னிடம் வந்து ஐ லவ் யூ என்று சொல்ல வைக்கிறேன் பார்" என்று சவால்விடுகிறாள். அவள் இப்படி சொல்வதில் ஏதோ சதித்திட்டம் இருப்பதாக நினைக்கும் புலிப்பாண்ட ி, பாரதியிடமிருந்து தப்பிக்க குறிப்பிட்ட நாளில் வெளியூர் சென்றுவிடலாம் என்று முடிவு செய்கிறான்.

புலிப்பாண்டியின் லாரியில் கிளீனராக வேலை பார்க்கும் லாரி டிரைவர் கிளினீர் "கிளி", நண்பன் லட்சுமணன் இருவரும் புலிப்பாண்டிக்க ு, " அவளுக்கு பயந்து கொண்டு வெளியூர் போக வேண்டாம். வீட்டிலேயே மௌனவிரதம் இருங்கள். அப்படியே அவன் வந்தாலும் நீங்கள் எதுவும் பேசாமல் இருந்துவிடுங்கள்" என்று ஐடியா கொடுக்கிறார்கள். அவர்கள் சொல்வதை ஏற்று புலிப்பாண்டியும் மௌனவிரதம் இருக்கிறான்.

அந்த நேரம் பார்த்து மேளதாளத்துடன ், சீர்வரிசைகளுடன் ஒரு பெரும் கூட்டம் புலிப்பாண்டியைத் தேடி வருகிறது. எதற்காக இந்த மேளதாளமெல்லாம் என்று அவர்களைப் பார்த்து கிளியும ், லட்சுமணனும் கேட் க, புலிப்பாண்டிக்கும் பாரதிக்கும் கல்யாண நிச்சயதார்த்தம் செய்ய வந்ததாக கூறுகிறார்கள்.

அதிர்ச்சியடையும் புலிப்பாண்டி மௌன விரதத்தைக் கலைத்த ு, " என்னைக் கேட்காமல் எனக்கு எப்படி கல்யாண நிச்சயதார்த்தம் செய்யலாம்" என்று கோபத்தோடு கேட்கிறான்.

வந்திருந்தவர்களில் ஒருவர ், புலிப்பாண்டியும ், பாரதியும் நெருக்கமாக இருப்பது போன்ற சில புகைப்படங்களை எடுத்துக் காட்ட ி, " பாரதியும் நீயும் இவ்வளவு நெருக்கமாக பழகிவிட்டு இப்போது நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொன்னால் எப்பட ி? அவளை வேறு யார் கல்யாணம் செய்து கொள்வார்கள ்?" என்று கேட்க புலிப்பாண்டி அதிர்ச்சியடைந்தான்.

இப்படி ஒரு காட்ச ி, ஹோம் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார ், திருமதி சுஜாதா விஜயகுமார் தயாரிப்பும் வீராப்பு படத்துக்காக திருநெல்வேலியில் படமாக்கப்பட்டது. புலிப்பாண்டியாக சுந்தர்.சியும ், பாரதியாக கோபிகாவும ், கிளியாக சந்தானமும ், லட்சுமணனாக பாலா லட்சுமணாவும் நடித்தனர்.

தலைநகரம் வெற்றிப் படத்துக்குப் பிறகு இப்படத்தில் சுந்தர்.சி. கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கோபிகா நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ ், விவேக ், டெல்லிகுமார ், மாறன ், விச்ச ு, சுப்ரீத ், சோப்ராஜ ், சுமித்ர ா, தேஜாஸ்ர ீ, சந்தோஷ ி, ரம்ய ா, பிரேம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு: கே.எஸ ். செல்வராஜ ், இசை: இமான ், படத்தொகுப்பு: காசி விஸ்வநாதன ், கலை: ஜன ா, பாடல்கள்: நா.முத்துகுமார ், சண்டைப் பயிற்சி: தளபதி தினேஷ ், நடனம்: கல்யாண ், பிரபுஸ்ரீனிவாஸ ், தயாரிப்பு மேற்பார்வை: பாலகோப ி

திரைக்கத ை, வசனம ், இயக்கம்: பத்ரி.

தயாரிப்பு: கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார ், திருமதி சுஜாதா விஜயகுமார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments