ஒரே மேடையில் இளையராஜா-பாரதிராஜா!

Webdunia
எல்லோர மூவி கிளப் பட நிறுவனம் சார்பில் ராஜ்பா ரவிஷங்கர் தமிழ ், தெலுங்க ு, மலையாளம ், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரிக்கும் அஜந்தா படத்துக்காக 36 பாடல்கள் பதிவு செய்யப்பட்டது. ஒரே இசையமைப்பாளர் இசையமைப்பில ், ஒரே படத்துக்காக இத்தனை பாடல்கள் பதிவு செய்யப்பட்டது உலகத்திலேயே இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஆடியோ கேஸட் வெளியீட்டு விழா மார்ச் 27ம் தேதி மதுரையில் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாலை 6.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இப்படத்தின் ஆடியோ சி.டி.யை இளையராஜா வெளியி ட, பாரதிராஜா பெற்றுக் கொள்கிறார். ஆடியோ கேஸட்டை இளையராஜா வெளியி ட, இயக்குநர் சேரன் பெற்றுக் கொள்கிறார்.

இந்திய சினிமா வரலாற்றிலேயே திறந்தவெளி அரங்கில ், மக்கள் முன்னிலையில் திரைப்பட ஆடியோ கேஸட் வெளியீட்டு விழா நடைபெறுவது இதுதான் முதல் முறை! அதோட ு, இசைஞானி இளையராஜா திறந்த வெளி அரங்கில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக இன்னிசை நிகழ்ச்சி நடத்துவதும் இதுவே முதல் முறை!

அஜந்தா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்த ு, இசைஞானி இலக்கியப் பேரவை துவக்க விழாவும ், தமிழ் இலக்கியத்தில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு பதக்கமும ், பரிசும் வழங்கப்படவிருக்கிறது. பா.நமச்சிவாயம் அவர்களுக்கு தமிழறிஞர் விருதும் இரண்டு லட்சம் ரொக்கப்பரிசும ், வண்ணதாசன் அவர்களுக்கு படைப்பிலக்கிய விருதும் இரண்டு லட்ச ரொக்கப் பரிசும ், சேதுபத ி, பழநிபாரதி இருவருக்கும் இசைஞானி இளையராஜா விருதுடன் ஐம்பதாயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படவிருக்கிறது.

இவை தவி ர, இசைஞானி இலக்கிய பெருமன்ற கெரளவ விருது என்ற பெயரில ், " இளைய இசைமுரசு" டி.எஸ ். ராஜா (ராஜபர்ட்), தேனிசைத் தென்றல் எம்.ரேணுகாதேவி (ஸ்த்ரீ பார்ட்), இன்னிசை வேந்தன் எம்.யு.பிரேம்குமார்(ஆர்மோனிய பின்பாட்டு), கோடை இடிமுழுக்கம் கே.எஸ ். சின்ன கோபால்(மிருதங்கம் டோலக்) ஆகிய நான்கு பேருக்கு விருதும ், பத்தாயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படவிருக்கிறது.

பரிசளிப்பு விழாவைத் தொடர்ந்த அஜந்தா படத்தில் இடம்பெறும் ஒன்பது பாடல்களையும ், திரைப்படத்தில் பாடிய பின்னணி பாடகர ், பாடகிகளைக் கொண்டு இன்னிசை நிகழ்ச்சியாக நடத்த இருக்கிறார் இளையராஜா. அந்த மேடையில் இளையராஜா உடன் கே.ஜே.ஜேசுதாஸ ், விஜய்ஜேசுதாஸ ், உன்னிகிருஷ்ணன ், திப்ப ு, மஞ்சர ி, ஸ்வேத ா, பவதாரண ி, மதுமிதா ஆகியோர் பாடுகிறார்கள். இந்த விழாவில் கவிஞர்.வால ி, எழுத்தாளர் ஜெயகாந்தன ், சினேகன ், கவிஞர் முத்துலிங்கம ், மு.மேத்த ா, பழனிபாரத ி, பா.விஜய ், நா.முத்துகுமார ், செந்தில்குமரன ், சினேகன ், கவிஞர்.பொன்னடியான ், சங்கிலிமுருகன ், இயக்குநர் கோகுலகிருஷ்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் ராஜ்பா ரவிஷங்கர ், இயக்குநர் கதா.க.திருமாவளவன் செய்து வருகிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஆர் ரஹ்மான் சிறுபான்மையினர்.. ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையினரா? சீமான் கேள்வி

ஜனநாயகனுக்கு தேதி குறிச்சாச்சு! இந்த முறையாவது சொன்ன தேதியில் சாட்டைய வீசுவாரா?

பல்சரில் ஆவியா? ‘கருப்பு பல்சர்’ படம் எப்படி இருக்கிறது? இதோ விமர்சனம்

கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?

ரஜினி - கமல் படத்தில் இணையும் பிரபலம்!.. அப்ப வேறலெவல்ல இருக்கும்!..

Show comments