சமீபத்தில் வெளியான மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் பெண் மதுவருந்தும் காட்சியை வைத்திருந்தனர். மலையாள ஒரிஜினலில் ஹீரோயின் மது அருந்தும் காட்சி இருந்ததால் தமிழிலும் அதனை வைத்தனர். மலையாளப் படத்தில் அதற்கு விளக்கம் தந்திருந்தார் இயக்குனர். கேரளாவில் உள்ள கிறிஸ்தவ குடும்பங்களில் மது அருந்துவது ஒன்றும் பெரிய தவறு கிடையாது. அந்த கலாச்சாரத்திலிருந்து வந்தவள் நாயகி. கோட்டயம் கதாநாயகியின் குணங்களை அப்படியே பாளையங்கோட்டை பெண்ணுக்கு பொருத்த முடியுமா? இப்போது எல்லா தரப்பு பெண்களும் மது அருந்துகிறார்கள் என்றாலும் கோட்டயம் நாயகிக்கு இருந்த லாஜிக் பாளையங்கோட்டை பெண்ணுக்கு இல்லை.
சமீபத்தில் மீரா ஜாஸ்மின் திருமணம் செய்து கொண்டார். மணமகன் மலையாள கிறிஸ்தவர். திருமணம் முடிந்ததும் எப்படி இருவரும் ஒயின் குடிக்கிறார்கள் பாருங்கள். இது தமிழ்நாட்டில் சாத்தியமா?
மது அருந்தும் காட்சியை படத்தில் வைக்கும் முன் பலமுறை இயக்குனர்கள் யோசிப்பது அவசியம்.
மார்ச் 11 ரஜினி வீட்டில் விசேஷம ்!
மார்ச் 11 ஆம் தேதியை கொண்டாட ரஜினியின் குடும்பம் தயாராகிறது. இதே தினத்தில்தான் சிவாஜிராவ் கெய்க்வாட்டை ரஜினிகாந்தாக பெயர் மாற்றினார் பாலசந்தர். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் இந்த தேதியில் நேரில் அல்லது தொலைபேசியில் பாலசந்தரிடம் ஆசி பெற்றுக் கொள்வது ரஜினியின் வழக்கம். இந்தமுறை மார்ச் 11-ஐ கொஞ்சம் விமரிசையாக கொண்டாட ரஜினியின் குடும்பம் தீர்மானித்துள்ளது.
கோச்சடையான் பாடல்கள், ட்ரெய்லர் வெளியிட்ட கையோடு இப்படியொரு கொண்டாட்டம் மனசுக்கும், வரவிருக்கும் கோச்சடையானுக்கும் புத்துணர்ச்சி தரும்.
ஆஸ்கர் ஏமாற்றம ்!
இந்த வருட ஆஸ்கர் விருது சிலருக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. முக்கியமாக அமெரிக்கன் ஹசில் திரைப்படம். மொத்தம் பத்து பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட இப்படம் ஒரு விருதைக்கூட பெறவில்லை. அமெரிக்கன் ஹசில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட போதே விமர்சனங்கள் எழுந்தன. இதுபோன்ற மொக்கை படத்துக்கு பத்து பரிந்துரைகளா?
அமெரிக்கன் ஹசில் போல் ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஒரு விருதும் பெறாத மற்ற படங்கள் கேப்டன் பிலிப்ஸ், தி வூல்ஃப் ஆப் வால் ஸ்ட்ரிட். இதுபோல் பலமுறை நடந்திருக்கிறது என்றாலும் அமெரிக்கன் ஹசிலின் தோல்வி அந்தப் படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பலத்த அடிதான்.
வித்யாபாலனின் விருது ஆச ை!
வித்யாபாலன் நடித்த சாதிக் கி சைட் எபெக்ட் உலகம் முழுவதும் நல்ல வசூலுடன் ஓடுகிறது. அதன் பிரமோஷனில் கலந்து கொண்ட வித்யாபாலன் பத்மஸ்ரீ விருதை எதிர்பார்க்கவில்லை, ஆஸ்கர் விருதும் விரைவில் கிடைக்கும் என்றார். அறிந்து சொன்னாரா இல்லை அறியாமல் இதை சொன்னாரா?
அமெரிக்காவில் தயாராகும் படங்களுக்கு வழங்கப்படுவதுதான் ஆஸ்கர் விருது. சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற ஒரேயொரு பிரிவில் மட்டுமே வேறு நாடுகளின் படங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த எளிய உண்மை அனைவருக்கும் தெரிந்ததே. இந்தியப் படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கும் வித்யாபாலன் இன்னும் எத்தனை நூறாற்ண்டானாலும் ஆஸ்கர் விருதை வாங்க முடியாது. பிறகு ஏன் ஆஸ்கர் வாங்குவேன் என்றார்?
தெரியாமல் சொன்னதா இல்லை ஹாலிவுட் படத்தில் நடிக்கயிருக்கிறாரா?