54வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விமர்சனங்களுக்கு இடம்தராத விருதுகள் இந்த பூமியில் இல்லை. எனக்கு சிறந்த நடிகருக்கான ஜுரி அவார்டு தந்திருக்கிறார்கள். இதே ஜுரிகள்தானே இன்னொருவரையும் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தார்கள் என்று விருதுகள் வழங்கப்படும் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார், 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான ஜுரி விருது பெற்ற நடிகர் திலகன்.இன்னும் ஏராளமான விமர்ச்சனங்கள் இதேபோன்று முன்வைக்கப்படலாம். அதற்கு முன் தேசிய விருது பெற்றவர்களில் நம்பிக்கையான சிலர் குறித்து...