Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் பயிற்சியாளர் பணி

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2015 (18:08 IST)
எரிசக்தித் துறையில் முத்தான நிறுவனமான என்.எல்.சி., தமிழ் நாட்டின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்று என்றே சொல்லலாம். இந்த நிறுவனத்தில் டெக்னீசியன்/கிராஜூவேட் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகளும் காலியிடங்களும்: டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் பிரிவு சார்ந்த மெக்கானிகல் இன்ஜினியரிங்கில் 70 இடங்கள், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்கில் 60 இடங்கள், சிவில் இன்ஜினியரிங்கில் 20 இடங்கள், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கெமிக்கல் இன்ஜினியரிங், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கமர்ஷியல் பிராக்டிஸ் ஆகியவற்றில் தலா 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிராஜூவேட் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் பிரிவு சார்ந்த மெக்கானிகல் மற்றும் எலக்ட்ரிகலில் தலா 50, சிவிலில் 15, கெமிக்கல் இன்ஜினியரிங், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் தலா 10, டிரான்ஸ்போர்டேஷன் இன்ஜினியரிங்கில் 15 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி: டெக்னீசியன் அப்ரென்டிஸ்ஷிப் டிரெய்னிங் பிரிவு மற்றும் கிராஜூவேட் அப்ரென்டிஸ்ஷிப் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய இன்ஜினியரிங் பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். கமர்ஷியல் பிராக்டிஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். 
தேர்ச்சி முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது.

தொடர்புடைய கல்வித் தகுதியை 01.01.2013க்கு பின்னர் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே என்.எல்.சி., நிறுவனத்தின் பயிற்சி எதுவும் பெற்றவராக இருக்கக் கூடாது. ஒரு வருடத்திற்கு மேல் பணியனுபவம் இருக்கக் கூடாது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களைப்பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை எடுத்து உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Deputy General Manager, 
Learning & Development Centre, 
Neyveli Lignite Corporation Limited. 
Block:20. Neyveli - 607 803.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.10.2015

இணையதள முகவரிhttp://www.nlcindia.co.in/careers/advt_no_EDC04_2015.pdf

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments