Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவில் நீக்கினாலும், கலைஞர் என் மகன் இல்லை என நீக்க முடியுமா? - மு.க.அழகிரி

திமுகவில் நீக்கினாலும், கலைஞர் என் மகன் இல்லை என நீக்க முடியுமா? - மு.க.அழகிரி

Ilavarasan

, புதன், 2 ஏப்ரல் 2014 (15:27 IST)
திமுகவில் இருந்து என்னை நீக்கி உள்ளார்கள். ஆனால் கலைஞர் என் மகன் இல்லை என நீக்க முடியுமா? என்று மு.க.அழகிரி கூறினார்.
 
தஞ்சையில் நடைபெற்ற ஒரு விழாவில் மு.க.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:–
 
என்னுடைய படம் போட்டு பொதுக்குழு கூட்டம் கூடியது என்று போஸ்டர் ஒட்டியதில் என்ன தவறு. இதற்காகவா எனது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவது. இதுதொடர்பாக ஏன்? என்று தலைவரிடம் நேரில் கேட்டேன். பொது செயலாளரிடம் கேட்டு சொல்கிறேன் என்றார். திடீரென்று என்னையும் கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள்.
 
தனி கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. திமுக நம்முடைய கட்சி. நாம் ஏன் வெளியே போகவேண்டும். சாகும் வரை கறுப்பு சிகப்பு கரை போட்ட வேட்டிதான் கட்டுவேன். திமுகவில் இருந்து என்னை நீக்கி உள்ளார்கள். ஆனால் கலைஞர் என் மகன் இல்லை என நீக்க முடியுமா? நான் தலைவர், பொது செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை.
 
தஞ்சை தொகுதி திமுக வேட்பாளராக டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். அவர் எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது எனக்கு தெரியும். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்கவில்லை. பழனிமாணிக்கத்துக்கு கொடுக்காவிட்டாலும், கட்சியில் உழைத்த வேறு யாருக்காவது சீட் கொடுத்திருக்கலாம்.
 
டி.ஆர்.பாலுவுக்கு 10 கப்பல் உள்ளது. அவர் எம்.ஜி.ஆரா அல்லது தலைவர் கலைஞரா? எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவேன் என்பதற்கு. கடந்த முறை டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அங்கு எதுவும் செய்யவில்லை. அதனால்தான் இங்கு வந்துள்ளார். தேர்தல் ஆலோசனைக்காக இங்கு வந்துள்ளேன். எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த தேர்தலை விட்டால் நமக்கு வேறு வாய்ப்பு இல்லை என்று அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil